twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    "எங்களுக்கு என்ன வந்துச்சு..?" சினிமா ஸ்ட்ரைக் குறித்து பெரும்பாலான மக்களின் மனநிலை இதுதான்!

    By Vignesh Selvaraj
    |

    சென்னை : தென்னிந்திய சினிமாத்துறையினரும், தயாரிப்பாளர்களும் தங்கள் படங்களை ரிலீஸ் செய்வதில் சந்திக்கும் பல பிரச்னைகளைக்கு எதிராக ஒரு முடிவை எடுத்திருக்கின்றனர்.

    படத்தை திரையிடும் கியூப் மற்றும் யுஎப்ஓ கட்டணங்கள் அதிகரிப்பு, பைரசி தளங்களால் வசூல் குறைவு என பல்வேறு பிரச்னைகளை எதிர்த்து மாபெரும் ஸ்ட்ரைக்கை அறிவித்திருக்கின்றனர்.

    டிஜிட்டல் சேவை வழங்குவோருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டிருக்கும் இந்த ஸ்ட்ரைக்கால் ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் பெரிதாக எந்த சிக்கலும் ஏற்படப் போவதில்லை.

    மார்ச் 1 முதல்

    மார்ச் 1 முதல்

    Qube, UFO கட்டணங்கள் குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் சினிமா உள்ளிட்ட தென்னிந்திய சினிமா துறையினர் மார்ச் 1 முதல் ஸ்ட்ரைக்கில் ஈடுபட உள்ளனர். இதனால் வருகிற மார்ச் 1-ம் தேதி முதல் புதிய படங்கள் ரிலீஸ் ஆகாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    தென்னிந்திய திரையுலகம்

    தென்னிந்திய திரையுலகம்

    தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநில திரைப்பட சங்கங்களும் கூடி விவாதித்துள்ளன. தெலுங்கு திரையுலகம் முன்னெடுக்கும் போராட்டத்தில் கலந்து கொள்வதென எல்லோரும் முடிவு செய்திருக்கிறார்கள். இதனால் வருகிற மார்ச் முதல் தேதியிலிருந்து ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலக ஸ்ட்ரைக் நடைபெற இருக்கிறது.

    மார்ச் 1 முதல் ரிலீஸ் இல்லை

    மார்ச் 1 முதல் ரிலீஸ் இல்லை

    தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் "அதிகப்படியான கட்டணத்தை குறைக்கவேண்டி, பலமுறை நேரிலும், கடிதம் மூலமாகவும் தொடர்பு கொண்டும் கொஞ்சமும் செவிசாய்க்காத டிஜிட்டல் சேவை வழங்குனர்களுக்கு எதிராக மார்ச் 1 முதல் தென்னிந்திய திரையுலகத்தினர் ஸ்ட்ரைக் நடத்த இருக்கிறோம்."

    தென்னிந்திய திரியுலகம் ஸ்ட்ரைக்

    தென்னிந்திய திரியுலகம் ஸ்ட்ரைக்

    கடந்த பிப்ரவரி 1-ம் தேதி தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் நடந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கக் கூட்டத்தில் கலந்து பேசி தமிழ்த் திரையுலகமும் மற்ற மாநிலங்களோடு இணைந்து ஸ்ட்ரைக்கில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    பைரசி பிரச்னை

    பைரசி பிரச்னை

    ஜி.எஸ்.டி வரி, கேளிக்கை வரியால் கணிசமாக உயர்ந்துள்ள தியேட்டர் கட்டணங்கள், படத்தை திரையிடும் Qube மற்றும் UFO டிஜிட்டல் சேவைக் கட்டணங்கள் அதிகரிப்பு, பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்த கட்டண உயர்வு எல்லாவற்றையும் எதிர்த்து இந்த ஸ்ட்ரைக் நடைபெறுகிறது.

    வரிவிதிப்புக்கு எதிராக

    வரிவிதிப்புக்கு எதிராக

    சினிமா துறையினருக்கு பிரச்னை வரும்போது மட்டும் ஒன்றாக இணைந்து போராட்டங்களில் குதிக்கிறார்கள். சமீபத்தில் சினிமாவுக்கு ஜி.எஸ்.டி வரிவிதிப்புக்கு எதிராகவும், கேளிக்கை வரி விதிப்புக்கு எதிராகவும் தியேட்டர் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டனர்.

    நடவடிக்கை இல்லை

    நடவடிக்கை இல்லை

    ஆனால், ரசிகர்களிடம் தியேட்டர்களில் வசூலிக்கப்படும் பார்க்கிங் கட்டணம், அதிகப்படியான ஸ்நாக்ஸ் விலைகள் ஆகியவற்றைப் பற்றிப் பலமுறை குறிப்பிட்டும் எந்த நடவடிக்கையையும் முழுமையாக எடுத்தபாடில்லை.

     யாருக்கு நஷ்டம்?

    யாருக்கு நஷ்டம்?

    இதனாலேயே, மக்களுக்கு திரைத்துறையினர் மீது மிகுந்த அதிருப்தி இருக்கிறது. மக்களின் பிரச்னைகளுக்கு திரையுலகினர் குரல் கொடுத்தால் தான் அவர்களது பிரச்னைகளையும் மக்கள் கண்டுகொள்வார்கள். இல்லையெனில், நமக்கென்ன நஷ்டம் எனப் போய்க்கொண்டு தான் இருப்பார்கள்.

    பைரசிக்கு எதிரான மனநிலை இல்லை

    பைரசிக்கு எதிரான மனநிலை இல்லை

    ஏனெனில், டிக்கெட் விலை இனிமேல் குறைய வாய்ப்பில்லை என்பதைப் புரிந்துகொண்டுவிட்டார்கள். தரமற்ற படங்களை இவ்வளவு விலை கொடுத்து தியேட்டர்களில் பார்ப்பதற்குப் பதில் பைரசி தளங்களிலேயே பார்த்துக்கொள்ளலாம் எனத் தங்களைச் சமாதானம் செய்துகொண்டு விட்டார்கள் மக்கள்.

    சம்பளத்தைக் குறைக்க வேண்டியது தானே

    சம்பளத்தைக் குறைக்க வேண்டியது தானே

    நஷ்டம் என கதறும் தயாரிப்பாளர்கள் நடிகர்களுக்குக் கொடுக்கும் சம்பளத்தைக் குறைக்க வேண்டியது தானே. அதைச் செய்யாமல் அரசுக்கான வரியைக் குறைக்கச் சொல்லியும், டிக்கெட் விலையை ஏற்றியும் மக்களை நெருக்கடிக்குள்ளாக்குவது ஏன்?

    English summary
    South Indian filmmakers and producers have taken a decision against digital service providers. After March 1, No movies are release in south indian cinema industry.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X