twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாலிவுட்டை தொடர்ந்து..டோலிவுட்டில் தலைவிரித்தாடும் சினிமா வாரிசுகள் கலாச்சாரம் !

    |

    சென்னை : இந்தியாவில் பாலிவுட் திரைத்துறையில் நடந்து அரங்கியிருக்கும் சினிமா வாரிசு அரசியல் காரணமாக திறமையான நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டை இழந்திருப்பது மிகப்பெரிய சோகத்தை உண்டாக்கி வரும் நிலையில்.

    Recommended Video

    V-CONNECT | GAYATHRI RAGHURAM | தமிழ் சினிமால NEPOTISM இல்ல ஆனா GROUPISM இருக்கு | FILMIBEAT TAMIL

    இதற்கு காரணம் அங்கு தலைவிரித்தாடும் சினிமா வாரிசு அரசியல் தான் என பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் தென்னிந்தியாவிலும் சினிமா வாரிசு அரசியல் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது அதைப்பற்றி இங்கு நாம் விரிவாக பார்ப்போம்.

    சுஷாந்த் சிங் தற்கொலை.. ரம்யா கிருஷ்ணன் காரில் சரக்கு.. மாயன் காலண்டர்.. கஸ்தூரி பளிச் பேட்டி!சுஷாந்த் சிங் தற்கொலை.. ரம்யா கிருஷ்ணன் காரில் சரக்கு.. மாயன் காலண்டர்.. கஸ்தூரி பளிச் பேட்டி!

    பொக்கிஷமாகும்

    பொக்கிஷமாகும்

    சினிமா கனவு என்பது எல்லாருக்கும் கிடைக்காத ஒரு அரிய பொக்கிஷமாகும். அது நீங்கள் சினிமா துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, இல்லை உங்கள் குடும்பத்தார் சினிமாவின் பின்புலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சரி என்று பெரும்பான்மையான நேரங்களில் நினைக்கையில் ஒரு சில சமயங்களில் இது சாதாரண குடும்பத்திலிருந்து வரும் திறமையான கலைஞருக்கு ஓர் எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.

    வாரிசுகள்

    வாரிசுகள்

    அதைப்போல் இன்றளவும் நடிகர்களின் வாரிசுகள் திரைத்துறைக்கு வந்து கொண்டுதான் இருக்கின்றனர் ஆனால் அவர்கள் அனைவரும் நிலைத்து இருக்கின்றனரா என்று கேட்டால் அங்குதான் திறமை என்ற ஒன்று மிகப்பெரிய ஒன்றாக பேசப்படுகிறது.

    சற்று குறைவுதான்

    சற்று குறைவுதான்

    இந்நிலையில் தமிழ் திரையுலகை நாம் கொஞ்சம் உற்று பார்த்தால் இங்கும் அந்த சினிமா வாரிசு அரசியல் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் பாலிவுட்டை விட இங்கு அதன் ஆதிக்கம் சற்று குறைவுதான். இப்போது தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், சூர்யா, தனுஷ், கார்த்தி என அனைவரும் திரைத்துறை பின்புலத்தை கொண்ட குடும்பத்தைச் சார்ந்தவர்களே.

    வாரிசுகள்

    வாரிசுகள்

    நடிகர் விஜய் பிரபல இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரின் மகனாவார், அதேபோல் இப்போதும் பிரபலமான நடிகராக இருந்தவரும் நடிகர் சிவகுமாரின் மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி. அதேபோல் நடிகர் தனுஷும் சினிமா பின்புலத்தைக் கொண்டவரே. அவரின் அண்ணன் இயக்குனர் செல்வராகவன் , தந்தை இயக்குனர் கஸ்தூரிராஜா ஆவார். மேலும் தனுஷின் ஆரம்பகால படங்கள் அனைத்தும் செல்வராகவன் மற்றும் கஸ்தூரிராஜாவின் இயக்கம் மற்றும் தயாரிப்பிலேயே உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    சொந்த முயற்சியால்

    சொந்த முயற்சியால்

    அதேசமயம் தமிழில் உச்ச நடிகர்களாக இருந்து வரும் அஜித் , விக்ரம் மற்றும் சிவகார்த்திகேயன் போன்றோர் எந்த ஒரு திரைத்துறை பின்புலமும் இல்லாமல் தங்களுடைய சொந்த முயற்சியால் இன்றும் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இவர்களது முதல் படம் வெளியாகவே பல வருடங்கள் ஆனது. அப்படி பல வருடங்கள் கழித்து இவரின் முதல் படம் வெளியான போதும் இவர்களைப் போன்ற சினிமா பின்புலம் இல்லாதவர்களுக்கு மக்களிடம் அறிமுகமாவது மிகமிக கடினமான ஒன்றாகும்.

    மிக சுலபமாக

    மிக சுலபமாக

    இந்நிலையில் சினிமா பின்புலம் உள்ள நடிகர்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் எதுவும் இல்லை அவர்கள் இன்னாரின் மகன், இன்னாரின் பேரன் என மக்களுக்கு தங்களது முதல் படத்திலேயே மிகப்பெரிய ஒரு அறிமுகம் மிக சுலபமாக கிடைத்து விடுகிறது. அதேசமயம் இவர்களுக்கு அந்தப் பெயரை காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்புகளும் அதிகமாக உள்ளது.

    பரந்து விரிந்து

    பரந்து விரிந்து

    பாலிவுட் திரைத்துறையில் எப்படி சினிமா வாரிசு அரசியல் கொடிகட்டி பறந்து கொண்டு இருக்கிறதோ அதேபோன்று தெலுங்கு பட துறையிலும் பல ஏக்கர் கணக்கில் பரந்து விரிந்து காணப்படுகிறது. தெலுங்கு திரைத் துறையை பொருத்தவரை என்டிஆர் குடும்பம், அக்கினேனி நாகேஸ்வர் ராவ் குடும்பம், டகுப்பாத்தி குடும்பம், சிரஞ்சீவி குடும்பம் மற்றும் கிருஷ்ணா குடும்பம் என தெலுங்கு திரைப்படத் துறையில் இருக்கும் பெரும்பான்மையானோர் இந்த நான்கு, ஐந்து குடும்பத்தின் வாரிசுகளாக இருந்துகொண்டு தெலுங்கு திரைப்படத் துறையை ஆட்டிப் படைத்து வருகின்றனர்.

    ஆட்டிப் படைத்து

    ஆட்டிப் படைத்து

    தெலுங்கில் தயாரிப்பு, நடிப்பு, டிஸ்ட்ரிபியூஷன் என எந்த ஒரு முக்கி துறையாக இருந்தாலும் சரி அது இவர்களுடைய குடும்பத்தைச் சார்ந்தவர் மட்டுமே இருப்பதால் பெரும்பான்மையான படங்களை இவர்களே தயாரித்து இவர்களே நடித்து இவர்களே தனக்குத்தானே சூப்பர் ஸ்டார், மெகா ஸ்டார், ஸ்டைலிஷ் ஸ்டார் என வலம் வந்து கொண்டு தெலுங்கு திரைத்துறையை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு வருகின்றனர்.

    கைக்குல்

    கைக்குல்

    இவ்வாறு தெலுங்கு திரைப்படத் துறையை சேர்ந்த நான்கு, ஐந்து குடும்ப வாரிசுகள் அவர்களுக்குள்ளேயே முடிச்சுகளை போட்டுக்கொண்டு தெலுங்கு திரைப்படத்துறையில் தங்களது கைக்குல் வைத்து கொண்டு ஆட்டிப் படைத்து வருகின்றனர். இவ்வாறு தென்னிந்திய திரைப்படத் துறையும் சினிமா வாரிசு அரசியலில் சிக்கித் தவித்துக் கொண்டு மீளமுடியாமல் பல திறமையான நடிகர்களை தொடர்ந்து இழந்து வருகிறது.

    English summary
    Cinema Successions in South India
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X