twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சின்னத்திரை, திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி… தொழிலாளர்கள் மகிழ்ச்சி !

    |

    சென்னை : தமிழகத்தில் ஊரடங்கு வரும் 28ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மூன்று வகைகளாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உததரவு அறிவிக்கப்பட்டுள்ளது

    அதன்படி தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்த மாவட்டங்களில் சின்னத்திரை மற்றும் திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

    படப்பிடிப்பு தளத்தில் 100 பேர் மட்டுமே இருக்க வேண்டும் என்ற சில நிபந்தனையுடன் படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

    குறைந்தது

    குறைந்தது

    தமிழகத்தில் கொரோனாவின் பரவல் கடந்த சில நாட்களாக கணிசமாக குறைந்து வருகிறது. இதையடுத்து, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், தற்போது மேலும், ஒரு வாரம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

    ஜூன் 28ந் தேதி வரை

    ஜூன் 28ந் தேதி வரை

    இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 28ம் தேதி வரை அமலில் இருக்கும். மூன்று வகைகளாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா பரிசோதனை கட்டாயம்

    கொரோனா பரிசோதனை கட்டாயம்

    நாளை முதல் திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், படப்பிடிப்பு தளத்தில், 100 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் பணிபுரியும் அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து கொண்டு படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

    மகிழ்ச்சி

    மகிழ்ச்சி

    மேலும், படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகளுக்கும் அனுமதி அளித்துள்ளது. திரையரங்கு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வட்டாச்சியரின் அனுமதி பெற்று வாரத்தில் ஒரு நாள் மட்டும் திறந்து பராமரிப்பு பணிகளை செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால், வாழ்வாதாரத்தை இழந்த சின்னத்திரை மற்றும் திரைப்பட தொழிலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    English summary
    Cinema television shooting tamilnadu government allowed
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X