இப்படி தாறுமாறாக சினிமா டிக்கெட் விலை உயர்ந்தால்.. ஆன்லைன் பைரசி எப்படி ஒழியும்?

By Vignesh Selvaraj

சென்னை : கேளிக்கை வரியைக் குறைக்க முடியாது எனக்கூறி தியேட்டர் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள அனுமதி அளித்திருக்கிறது தமிழக அரசு.
ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை நாடு முழுவதும் அமலுக்கு வந்ததையடுத்து, மாநில அரசுகள் கேளிக்கை வரி கட்டணம் நிர்ணயித்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி தமிழக அரசு திரைப்படங்களுக்கு 30% கேளிக்கை வரியை நிர்ணயித்தது. இதை எதிர்த்து தமிழகம் முழுவதும் திரைப்படத் துறையினர், திரையரங்க ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

அதனால், தமிழக அரசு திரைத்துறையினரிடம் பேச்சு வார்த்தை நடத்தியதால், திரையரங்குகளில் டிக்கெட்டுகள் கேளிக்கை வரி சேர்க்கப்படாமல் ஜி.எஸ்.டி வரி மட்டும் பெறப்பட்டு வந்தது. அப்போதே முன்பை விட 20 முதல் 40 ரூபாய் வரை மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் உயர்ந்திருந்தது.

கோரிக்கை

கோரிக்கை

கடந்த வாரம், 30% என்ற கேளிக்கை வரியை 10% ஆகக் குறைத்து வசூலிக்கப்படும் என்று அரசு அறிவித்தது. இந்த 10% கேளிக்கை வரி முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும் எனத் தெரிவித்திருந்தது. இதற்கு திரையுலகினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கேளிக்கை வரியை முழுமையாக ரத்து செய்யக்கோரி தியேட்டர் ஊழியர்கள் சிலர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உரிமையாளர்கள் தீர்மானம்

உரிமையாளர்கள் தீர்மானம்

இந்நிலையில், மதுரை உட்பட 6 மாவட்டங்களைச் சேர்ந்த தியேட்டர் உரிமையாளர்கள், கேளிக்கை வரி 10% என அறிவிக்கப்பட்டதை தமிழக அரசு திரும்பப் பெற வலியுறுத்தியுள்ளனர். கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் தீபாவளி முதல் தியேட்டர்களை மூடவும் தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

25% உயர்த்தலாம்

25% உயர்த்தலாம்

கேளிக்கை வரி விதிப்பால் அரசுக்கு எதிராகப் பொங்கும் திரைத்துறையினரையும், திரையரங்க உரிமையாளர்களையும் சமாதானம் செய்யும் பொருட்டு, தமிழக அரசு, டிக்கெட் விலையை 25% அதிகரித்துக்கொள்ள தற்போது அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் மல்டிப்ளக்ஸ்களில் 160 ரூபாய் வரையும், ஏ.சி. திரையரங்குகளில் 120 ரூபாய் வரையும் விற்கப்படும்.

மக்களை பாதிக்கும்

மக்களை பாதிக்கும்

அரசுகளுக்கும், தொழில் நிறுவனங்களுக்குமான பிரச்னைகள் எப்போதும் சாமானிய மக்கள் தலையில்தான் விடியும். கேளிக்கை வரி விதிப்பால் திரைத்துறை பாதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டியதை அடுத்து டிக்கெட் விலையை உயர்த்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது மக்களை நேரடியாக பாதிக்கக்கூடியதுதான்.

மக்களே ஒப்புக்கொள்கிறார்கள்

மக்களே ஒப்புக்கொள்கிறார்கள்

கடந்த சில வருடங்களாக ஆன்லைன் சினிமா பைரசி வணிகம் ருத்ரதாண்டவம் ஆடி வருவது அனைவரும் அறிந்ததே. பைரசியை ஒழிக்க சினிமா தயாரிப்பாளர்கள் முயன்று வரும் நிலையில், டிக்கெட் விலை அதிகமாக இருப்பதால் மக்களே ஆன்லைனின் பார்ப்பதை விரும்புவதாக சமூக வலைதளங்களில் வெளிப்படையாகத் தெரிவித்து வருகிறார்கள்.

தவிர்க்க முடியாது

தவிர்க்க முடியாது

இந்நிலையில், இன்னும் டிக்கெட் கட்டணத்தை அதிகரித்தால் பெரும்பான்மையானோர் தியேட்டர்களுக்குச் சென்று படம் பார்ப்பதை விடுத்து பைரசி தளங்களையே நாடுவதைத் தவிர்க்க முடியாது. ஏனெனில், இப்போது உயரவிருக்கும் டிக்கெட் தொகை 6 மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட 20 முதல் 50 வரை அதிகம்.

ஆன்லைனில் பார்க்கலாம்

ஆன்லைனில் பார்க்கலாம்

சினிமா டிக்கெட் விலை அதிரடி அதிகரிப்பால் தியேட்டர்களுக்குச் செல்லும் ரசிகர்களின் எண்ணிக்கை மேலும் குறைய வாய்ப்புள்ளது. 160 ரூபாய் கொடுத்து படம் பார்ப்பதை விட ஆன்லைன் டேட்டாவைப் பயன்படுத்தி இலவசமாகப் பார்த்துவிடலாம் எனும் மனநிலைக்கு மக்களைத் தள்ளிக் கொண்டிருக்கிறது தமிழக அரசு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X