அப்பா நீயே என் உலகம்... சிறுவயது புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்துக்கள் சொன்ன திரைப் பிரபலங்கள்!
சென்னை : உலகம் முழுவதும் நேற்று தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது.
திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தந்தையர் தினத்தை போற்றும் வகையில் சமூக வலைதளங்களில் பாசமிகு பதிவுகளை இட்டிருந்தனர்.
இந்த நிலையில் தமிழ் பிரபலங்கள் பலர் தங்களுடைய அப்பாக்களுடன் இருக்கும் சிறுவயது புகைப்படங்களை வெளியிட்டு தந்தையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

அரிய புகைப்படத்தை
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமான நகுல் அதன் பிறகு காதலில் விழுந்தேன் படத்தில் கதாநாயகனாக என்ரி கொடுத்தார் . முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை தட்டிச் சென்றார். நடிகை தேவயானியின் தம்பியான இவர் நடிகராக மட்டுமல்லாமல் பல துள்ளலான பாடல்களை பாடியும் உள்ளார். இப்பொழுது சுனைனா உடன் இணைந்து "எரியும் கண்ணாடி" படத்தில் நடித்துவரும் நகுல் தந்தையர் தினத்தை போற்றும் வகையில் தனது அப்பாவுடன் சிறு வயதில் எடுத்த அரிய புகைப்படத்தை வெளியிட்டு தந்தையர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

லட்சியத்தை அடையும் வரை
ஓ மை கடவுளே வெற்றியைத் தொடர்ந்து அசோக்செல்வன் தெலுங்கிலும் அறிமுகத்தை கொடுத்துள்ளார். தமிழில் தீனி என்ற பெயரிலும் தெலுங்கில் நின்னிலே நின்னிலே என்ற பெயரிலும் ரிலீசானது. இப்பொழுது பிரியா பவானி சங்கர் உடன் இணைந்து ஹாஸ்டல் மற்றும் ஜனனி ஐயர் உடன் இரண்டாம் முறையாக இணைந்து வேழம் ஆகிய படங்களில் அசோக்செல்வன் நடித்துவருகிறார். இந்த நிலையில் தந்தையர் தினத்தை முன்னிட்டு தனது அப்பா தூக்கி வைத்து கொஞ்சம் செம க்யூட்டான புகைப்படத்தை பதிவிட்டு அப்பா நீங்கள் எதுவுமே இல்லாமல் கிராமத்தில் இருந்து மெட்ராஸுக்கு வந்தீர்கள். ஒவ்வொரு நாளும் கடுமையாக உழைத்து குடும்பத்தை காப்பாற்றி உள்ளவர்கள் என்பதை நான் நன்கு உணர்வேன். பெரிதாக கனவு காண வேண்டும் லட்சியத்தை அடையும் வரை ஓயக்கூடாது என்பதை எனக்கு பயிற்றுவித்ததற்கு மிக்க நன்றி என தந்தையர் தினத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சாந்தனு பாக்யராஜ்
மாஸ்டரில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் சாந்தனு பாக்யராஜ் இப்பொழுது முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தில் அதுல்யா உடன் இணைந்து நடித்து வருகிறார். சாந்தனு மற்றும் இயக்குனர் பாக்யராஜ் இருவரும் தந்தை மகன் போல பழகாமல் நண்பர்களாக பழகுவது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த நிலையில் தந்தையர் தினத்தை முன்னிட்டு அப்பா பாக்யராஜ் உடன் இணைந்து எடுத்துக்கொண்ட க்யூட்டான புகைப்படங்களை பகிர்ந்து தந்தையர் தின வாழ்த்துக்கள் சாந்தனு தெரிவித்துள்ளார்.

க்யூட்டான புகைப்படங்களை
மூன்றாவது முறையாக நடிகர் ஆதிக்கு ஜோடியா சிவுடு என்ற தெலுங்கு திரைப்படத்தில் நிக்கி கல்ராணி நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். தமிழில் இடியட் என்ற காமெடி ஹாரர் படத்தில் நடித்து வருகிறார். இதில் மிர்ச்சி சிவா லீட் ரோலில் நடித்து வர தில்லுக்குதுட்டு பட இயக்குனர் ராம் பாலா இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த நிலையில் நடிகை நிக்கி கல்ராணி தந்தையர் தினத்தை முன்னிட்டு தனது அப்பாவுடன் எடுத்துக்கொண்ட பல க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு தந்தையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











