twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்திய சினிமா வரலாறு திலிப் குமாருக்கு முன் மற்றும் பின் என்றே எழுதப்படும்... அமிதாப் பச்சன் அஞ்சலி

    |

    மும்பை : இந்திய சினிமா ஜாம்பவான் நடிகர் திலீப் குமார் தனது 98வது வயதில் மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்துள்ளார்.

    அவரது மறைவிற்கு இந்திய அளவில் திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    ஸ்டேபிளர் பின்னில் தனுஷின் கர்ணன் ஓவியம்...சாதனை படைத்த கோவை இளைஞர் ஸ்டேபிளர் பின்னில் தனுஷின் கர்ணன் ஓவியம்...சாதனை படைத்த கோவை இளைஞர்

    நடிகர் அமிதாப் பச்சனும் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய சினிமா வரலாறு திலீப் குமாரை வைத்தே எழுதப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    திலீப் குமார் மறைவு

    திலீப் குமார் மறைவு

    பாலிவுட் ஜாம்பவான் திலீப் குமார் மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்துள்ளார். பாலிவுட்டில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சிய அவரது மறைவு மும்பை மட்டுமின்றி இந்திய அளவில் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவரது மறைவுக்கு தொடர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

    திலீப் குமார் மறைவு

    திலீப் குமார் மறைவு

    மூச்சுத் திணறல் காரணமாக மும்பையின் ஹிந்துஜா மருத்துவமனையில் இரு தினங்களுக்கு முன்பு சேர்க்கப்பட்ட அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். உடல் மூப்பு காரணமாக அவர் கடந்த சில மாதங்களாக சிரமப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டரில் இரங்கல்

    ட்விட்டரில் இரங்கல்

    இன்று காலை 7.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக அவருக்கு சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் ஜலீல் பார்க்கர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவரது மறைவிற்கு நடிகர் அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    அமிதாப் பச்சன் பாராட்டு

    அமிதாப் பச்சன் பாராட்டு

    சினிமாவின் முக்கிய நிறுவனம் மறைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எப்போது இந்திய சினிமாவின் வரலாறு எழுதப்பட்டாலும் திலீப்குமாருக்கு முன் மற்றும் அவருக்கு பின் என்றே எழுதப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். இந்த நெருக்கடியிலிருந்து அவரது குடும்பத்தினர் வெளிவர அவர்களுக்கு வலிமை கிடைக்க வேண்டுகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Actor Amitabh Bachchan mourns Dilipkumar's death
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X