»   »  வெளிப்புற படப்பிடிப்பு கட்டணம் குறைப்பு!

வெளிப்புற படப்பிடிப்பு கட்டணம் குறைப்பு!

Subscribe to Oneindia Tamil

அதிமுக ஆட்சியில் பல மடங்காக உயர்த்தப்பட்ட வெளிப்புறப் படப்பிடிப்புக்கானகட்டணம் குறைக்கப்படுவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு (டிவி கலைஞர்கள்) சார்பில்கருணாநிதிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு செய்தி ஒலிபரப்புத் துறைஅமைச்சர் பரிதி இளம்வழுதி முன்னிலை வகித்தார். ஏவி.எம். சரவணன் தலைமைதாங்கினார்.

இயக்குனர்கள் கே.பாக்யராஜ், ஆர்.சி.சக்தி, நடிகர் சிவக்குமார், தயாரிப்பாளர்கள்விடுதலை, டி.ஜி.தியாகராஜன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கருணாநிதி பேசுகையில், முன்பு திரைப்படம் வெளியிடப்பட்டால் 100பிரதிகள் மட்டுமே எடுக்கப்பட்டு ஆங்காங்கு உள்ள தியேட்டர்களில் திரையிடப்படும்.

ஆனால் இன்று சின்னத் திரைக் கலைஞர்கள், பெரிய திரைக் கலைஞர்க்ளை விட புகழ்பெற்றுள்ளனர். அதற்குக் காரணம் அனைத்து வீடுகளையும் அவர்கள் சின்னத்திரைமூலம் அடைந்ததுதான்.

வேறு சிலர் சேர்ந்து புதிதாக ஒரு சின்னத் திரைக் கலைஞர்கள் சங்கம் உருவாக்கப்போவதாக அறிந்தேன். முதலில் நீங்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.அப்போதுதான் நீங்கள் வைக்கும் கோரிக்கைகள் பலம் வாய்ந்ததாக இருக்கும்.உங்களது கோரிக்கைகள் அனைத்தையும் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பேன்.

கடந்த ஆட்சி காலத்தில் அரசுக்குச் சொந்தமான கட்டடங்களில் படபிடிப்புநடத்தினால் செலுத்த வேண்டிய கட்டணத்தை கடுமையாக உயர்த்தினார்கள். அதைஇந்த அரசு சற்றே குறைக்க முடிவு செய்துள்ளது.

அதன்படி, இனி சென்னை ராஜாஜி அரங்கில் வாடகைக் கட்டணம் ரூ. 10,000மட்டுமே. கடந்த திமுக ஆட்சியில் இது ரு. 1,000 ஆக இருந்தது. ஆனால் அதிமுகஆட்சிக்கு வந்த பின்னர் 2003ம் ஆண்டு இதன் வாடகை ரூ. 1 லட்சமாகஉயர்த்தப்பட்டது. பின்னர் 25,000 ஆக குறைத்தனர்.

இதேபோல முதல் தரக் கட்டடங்களுக்கான வாடகைக் கட்டணம் ரூ. 10,000லிருந்து5,000 ஆக குறைக்கப்படும். இரண்டாம் தரக் கட்டடங்களுக்கு ரூ. 3,000 வாடகையாகவசூலிக்கப்படும். குறைக்கப்பட்ட கட்டணத் தொகையில் சின்னத் திரைக்கலைஞர்களுக்கு 50 சதவீத சலுகை அளிக்கப்படும்.

இங்கே, நண்பர் நடிகர் சிவக்குமார் பேசும்போது, சிவாஜியின் இளமைக்காலஉருவத்தை வைத்து கம்பீரமான முறையில் சிலை அமைக்க வேண்டும் என்றார்.

ஒருவருக்கு சிலை வைக்கும்போது அவர் கடைசி காலத்தில் எப்படி இருந்தாரோ,அந்த உருவத்தில்தான் சிலை வைக்க வேண்டும். எனவே சிவாஜி கணேசனுக்கும்அவரது கடைசியில் எப்படி காணப்பட்டாரோ அதேபோலத்தான் சிலைவைக்கப்படும். அதேசமயம், அவரது சிலை கம்பீரமாகவும் இருக்கும் என்றார்கருணாநிதி.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil