»   »  சினிமா உலக தாதாக்கள்

சினிமா உலக தாதாக்கள்

Subscribe to Oneindia Tamil
திரையுலகில் பெருகி வரும் தாதாக்கள் அட்டகாசத்தை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் என்று தமிழ்த் திரைப்பட பாதுகாப்புக் கழக தலைவரும், முன்னாள்தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவருமான கே.ராஜன் கூறியுள்ளார்.

அஜீத்தை பாலா அன்ட் கோ மிரட்டியது தொடர்பாக ராஜன் கூறுகையில்,

எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட சங்கத்தை அணுகிதான் தீர்வு காணவேண்டும். அந்த நிலை இப்போது இல்லை. பிரச்சினைக்குத் தீர்வு காண தாதாக்களைநாடுகின்றனர். அல்லது தாதாக்களாக அவர்களே மாறி விடுகிறார்கள்.

அஜீத் விவகாரத்திலும் இதுதான் நடந்துள்ளது. இயக்குனர் ஒருவருக்கும்,தயாரிப்பாளர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையின்போது அந்தத்தயாரிப்பாளரைக் கடதிக் கொண்டு போனவராக கூறப்பட்டவர்தான் இப்போதையபிரச்சினையிலும் சம்பந்தப்பட்டுள்ளார். இந்த விஷயத்தில் அவர் தாதாக்களின்உதவியை நாடியுள்ளார்.

தயாரிப்பாளர் சங்கத்தை அவர் மதிக்கவில்லை. அதேபோல அஜீத்தும் தனதுசங்கத்தை மதிக்கவில்லை. இரண்டு பேருமே தங்களது சங்கங்களை ஒரு பொருட்டாகமதிக்கவில்லை.

சரி அஜீத் புகார் செய்யவில்லை. இருந்தாலும் இந்த விஷயத்தில் நடிகர் சங்கமேதலையிட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை. இது எதைக் காட்டுகிறதுஎன்றால், சங்கங்கள் அனைத்தும் வெறும் அலுவலகங்களாகவே இருக்கிறதுஎன்பதுதான் உண்மை.

அதிலும் தயாரிப்பாளர் சங்கம் கடந்த 6 மாதமாக செத்துக் கிடக்கிறது.

ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் என்பார்கள்.

இப்போது தயாரிப்பாளர் சங்கம் இரண்டு பட்டுக் கிடப்பதால், கூத்தாடிகளாகதாதாக்கள் புகுந்து கட்டப் பஞ்சாயத்து செய்ய வந்து விட்டார்கள்.

தமிழ் சினிமா தாதாக்களின் கைக்குப் போய் விடாமல் விழித்துக் கொள்ள வேண்டும்.இல்லாவிட்டால் சினிமாவை அவர்கள் கையில் கொடுத்து விட்டு நாம் விழி பிதுங்கிநிற்க வேண்டும்.

எனவே தாதாக்களை ஒடுக்க அனைத்து சங்கங்களையும் ஒன்றிணைத்து போராட்டம்நடத்த தமிழ் திரைப்பட பாதுகாப்புக் கழகம் முயற்சியில் இறங்கியுள்ளது.அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

தேவைப்படடால் தெருவில் இறங்கிப் போராடவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்என்றார் ராஜன்.

Read more about: tamil cine filed and rowdies
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil