»   »  'இது அதுமாதிரி இல்லாம புதுமாதிரி...' கம்-பேக் கொடுக்கும் பெண் இயக்குநர்

'இது அதுமாதிரி இல்லாம புதுமாதிரி...' கம்-பேக் கொடுக்கும் பெண் இயக்குநர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : ஆசியாவின் முதல் பெண் ஒளிப்பதிவாளர் எனும் பெருமை பெற்றவர் பி.ஆர்.விஜயலட்சுமி. பாக்யராஜ் இயக்கிய 'சின்ன வீடு' படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி பின்னர் விஜயகாந்த், பிரபு உள்ளிட்ட பலரின் படங்களில் பணியாற்றினார்.

1995-ம் ஆண்டு எஸ்.பி.பி, ரகுமான் நடிப்பில் 'பாட்டு பாடவா' எனும் படத்தை இயக்கி இயக்குநராகவும் தன்னை அடையாளப் படுத்திக்கொண்டார். அதன்பிறகு பல வருடங்களாக சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார்.

கம்- பேக் :

கம்- பேக் :

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பி.ஆர்.விஜயலட்சுமி இயக்கும் படம் 'அபியும் அனுவும்'. இந்தப் படத்தில் மலையாள நடிகர் டொவினோ தாமஸ், பியா பாஜ்பாய், ரோஹினி, சுஹாசினி, பிரபு, மனோபாலா, தீபா ராமானுஜம் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளர்.

உண்மையிலேயே புதுமையான கதை :

உண்மையிலேயே புதுமையான கதை :

படம் பற்றி இயக்குனர் விஜயலட்சுமி கூறியதாவது, 'இது ஒரு புதுமையான, இது வரை சொல்லப்படாத கதை. இதே போல் பல இயக்குனர்கள் முன்பு கூறியிருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். ஆனால் இது அவற்றைப் போல் கிடையாது. இது எவ்வளவு புதுமையான கதை என்பதை இப்படம் வெளியாகும்போது ரசிகர்கள் அறிவார்கள்.

டொவினோ தாமஸ் அறிமுகம் :

டொவினோ தாமஸ் அறிமுகம் :

மலையாள சினிமாவில் வேகமாக வளர்ந்து ரசிகர்களை ஈர்த்து வரும் டொவினோ தாமஸ் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக கால் பாதிக்கவுள்ளார். அவருக்கு ஜோடியாக பியா பாஜ்பாய் நடித்துள்ளார்.

மாறுபட்ட காதல் கதை :

மாறுபட்ட காதல் கதை :

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இது ஒரு வித்தியாசமான மற்றும் துணிச்சலான படமாக இருக்கும். முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் காதலை இப்படத்தில் கையாண்டுள்ளோம். படத்தில் இருக்கும் அதிரடிகளை மேலும் உடைக்காமல், இது ரசிகர்களுக்கு சுவாரஸ்யமான திருப்பங்களுடன் இருக்கும் ஒரு உணர்வுப்பூரமான காதல் கதையாக இருக்கும் என கூறிக்கொள்ள விரும்புகிறேன்.' என்கிறார் விஜயலட்சுமி.

English summary
Cinematographer director Vijayalakshmi makes a come-back to tamil cinema. She directs a movie named as 'Abhiyum anuvum'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil