என்னங்க பஞ்சாயத்து? தெலுங்கு பட ஷூட்டிங்கில் இருந்து பாதியில் வெளியேறிய தமிழ் ஒளிப்பதிவாளர்

By

சென்னை: தெலுங்கு படத்தின் ஷூட்டிங்கில் இருந்து தமிழ்ப்பட ஒளிப்பதிவாளர் திடீரென்று வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தைச் சேர்ந்தவர் ஒளிப்பதிவாளர் டட்லி. இவர், இந்தியில் ரோகித் ஷெட்டி இயக்கிய சென்னை எக்ஸ்பிரஸ், தில்வாலே, சிங்கம், ஆல் த பெஸ்ட் உட்பட சில படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தமிழில், விஜய் சேதுபதி நடித்த ஜூங்கா, விஷால் நடித்த ஆக்‌ஷன் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். இப்போது ஜெயம் ரவி நடிக்கும் பூமி படத்துக்கு ஒளிப்பதிவு செய்துவருகிறார்.

சாய் ஶ்ரீனிவாஸ்

சாய் ஶ்ரீனிவாஸ்

இந்நிலையில், இவர் தெலுங்கில் ஒரு படத்துக்கு ஒப்பந்தமானார். இதன் மூலம் தெலுங்கில் அறிமுகமாக இருந்தார். இதில் பெல்லங்கொண்டா சாய் ஶ்ரீனிவாஸ் ஹீரோவாக நடித்துவருகிறார்.

ஐதராபாத்தில்

ஐதராபாத்தில்

படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. சந்தோஷ் சீனிவாஸ் இயக்கி வருகிறார். இதை ஜி.சுப்ரமணியன் தயாரிக்கிறார். இதன் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்து வந்தது.

இயக்குனருடன் தகராறு

இயக்குனருடன் தகராறு

அப்போது இயக்குனருக்கும் டட்லிக்கும் ஷாட் வைப்பதில் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் டட்லி படப்பிடிப்பில் இருந்து திடீரென்று வெளியேறினார்.

தெலுங்கு ஒளிப்பதிவாளர்

தெலுங்கு ஒளிப்பதிவாளர்

இதையடுத்து தயாரிப்பாளர் சுப்ரமணியம், பிரபல தெலுங்கு ஒளிப்பதிவாளர், சோட்டா கே.நாயுடுவை ஒப்பந்தம் செய்தார். அவர் இப்போது ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார்.

கருத்துவேறுபாடு

கருத்துவேறுபாடு

இதுபற்றி படக்குழு கூறும்போது, இயக்குனருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் படைப்பு ரீதியான கருத்துவேறுபாடு ஏற்பட்டதால், தொடர்ந்து பணியாற்ற முடியாது என்று டட்லி வெளியேறிவிட்டார். இப்போது நாயுடு படமாக்கி வருகிறார் என்றனர்.

இந்தச் சம்பவல் டோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X