twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தளபதியோட ஒர்க் பண்றது ஹோம் கிரவுண்ட்ல விளையாடுற மாதிரி – ஜி.கே. விஷ்ணு!

    அட்லி மற்றும் நடிகர் விஜய்யுடன் வேலை செய்வது சொந்த மண்ணில் விளையாடுவது போல இருந்தது என பிகில் படத்தின் ஒளிப்பதிவாளர் ஜி.கே. விஷ்ணு கூறியுள்ளார்.

    |

    Recommended Video

    GK Vishnu Exclusive | Bigil | Vijay | தளபதியோட ஒர்க் பண்றது ஹோம் கிரவுண்ட்ல விளையாடுற மாதிரி

    சென்னை: தீபாவளியை முன்னிட்டு வரும் அக்டோபர் 25ம் தேதி பிகில் திரைப்படம் வெளியாகிறது.

    விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், இந்துஜா, விவேக், யோகி பாபு, ஆனந்தராஜ் என நடிகர்கள் பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது.

    இந்த படத்தின் ஷூட்டிங் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை ஒளிப்பதிவாளர் ஜி.கே. விஷ்ணு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

    #Housefull Express ரயிலில் சென்ற படக்குழு - ஒரே கல்லில் ரெண்டு மாங்கா#Housefull Express ரயிலில் சென்ற படக்குழு - ஒரே கல்லில் ரெண்டு மாங்கா

    மெர்சல் கேமராமேன்

    மெர்சல் கேமராமேன்

    அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை அடைந்த மெர்சல் படத்திலும் ஜி.கே. விஷ்ணு தான் ஒளிப்பதிவாளர். அந்த படத்திலும், மூன்று விஜய் கதாபாத்திரங்களை வெவ்வேறு லென்ஸ் மற்றும் கோணத்தில் அசத்தலாக காண்பித்து தளபதி ரசிகர்களை குஷி படுத்தியவர் ஜி.கே. விஷ்ணு. மேஜிக் காட்சிகளாக இருக்கட்டும், திருவிழாவில் தீப்பிடிக்கும் காட்சியாக இருக்கட்டும், வேட்டி சட்டையில் வெளிநாட்டுக்கு விஜய் செல்லும் காட்சியென அசத்தியிருப்பார் ஜி.கே. விஷ்ணு.

    புட் சட்னி

    புட் சட்னி

    மெர்சல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஒளிப்பதிவாளராக அறிமுகமான ஜி.கே. விஷ்ணு, அதற்கு முன்பாக, பிரபல யூடியூப் சேனலான புட் சட்னியில் கேமராமேனாக பணிபுரிந்து வந்தார். கம்ப்யூட்டர் இன்ஜினியர் மாணவரான விஷ்ணு, லைட்டிங்கில் கொண்ட அதீத ஈடுபாடு காரணமாக ஒளிப்பதிவாளராக மாறினாராம். Ctrl+alt+del எனும் வெப்சீரிஸ் இவரது ஒளிப்பதிவில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    அட்லியுடன் நட்பு

    அட்லியுடன் நட்பு

    அட்லி இயக்குநர் ஆவதற்கு முன்பிருந்தே ஜி.கே. விஷ்ணுவுடன் நல்ல நட்பு இருந்து வந்துள்ளது. அந்த நட்பின் பலனாக, அட்லி சினிமாவுக்குள் நுழைந்தவுடன் தனது நண்பர் மற்றும் திறமையான ஒளிப்பதிவாளரான ஜி.கே. விஷ்ணுவுக்கு மெர்சல் படத்தில் வாய்ப்பு வழங்கினார். நண்பன் கொடுத்த வாய்ப்பை சிறப்பாக செய்து தான் ஒரு சிறந்த ஒளிப்பதிவாளர் என்பதை விஷ்ணு நிரூபித்துள்ளார் என்பதற்கு மெர்சல் விஷுவல்ஸே சாட்சி.

    ஹோம் கிரவுண்ட்

    ஹோம் கிரவுண்ட்

    பொதுவாக விளையாட்டு வீரர்கள் ஹோம் கிரவுண்டில் சிறப்பாக விளையாடுவார்கள். பிகில் படத்தில் மீண்டும் அட்லி மற்றும் தளபதி விஜய்யுடன் தான் இணைந்தது ஹோம் கிரவுண்டில் விளையாடுவது போல் இருந்ததாக விஷ்ணு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்த படத்திலும் ராயப்பன், மைக்கேல் மற்றும் பிகில் என மூன்று கெட்டப்புகளுக்கு ஏற்றவாறு ஒளிப்பதிவில் தனது வித்தைகளை அவிழ்த்து விட்டுள்ளார் விஷ்ணு.

    விஜய் எப்படி

    விஜய் எப்படி

    நடிகர் விஜய்யுடன் பணிபுரிவது தனக்கு மிகவும் ஈசியாக இருந்ததாக விஷ்ணு கூறியுள்ளார். நடிகர் விஜய் பெர்ஃபார்மன்சில் வெரைட்டி காட்டுவதால், அதற்கு ஏற்றார்போல பலவித லென்ஸ்களை தன்னால் பிகில் படத்தில் பயன்படுத்த முடிந்தது என விஷ்ணு கூறியுள்ளார்.

    புடிச்ச லுக்

    புடிச்ச லுக்

    பிகில் படத்தில் விஷ்ணுவின் ஃபேவரைட் லுக் என்றால் அது அப்பா கதாபாத்திரமான ராயப்பன் லுக் தானாம். அந்த கதாபாத்திரத்திற்காக 25 மேக்கப் டெஸ்ட் போடப்பட்டதாகவும், எல்லா தோற்றத்திலும் விஜய் மிகவும் யங்காக தெரிந்ததால், சிரமப்பட்டு கடைசியாக இந்த ராவான ராயப்பன் லுக்கை ஓகே செய்ததாகவும் கூறியுள்ளார்.

    வெடிக்கும்

    வெடிக்கும்

    நிச்சயம் இந்த தீபாவளிக்கு விஜய்யின் பிகில் பட்டாசு போல தியேட்டர்களில் வெடிக்கும் என தெரிவித்த அவர், ராயப்பன் கதாபாத்திரத்திற்காக அதிகளவில் காண்ட்ராஸ்ட் கலர்களை தான் பயன்படுத்தியுள்ளதாகவும், ஃபுட்பால் காட்சிகள் பிரம்மிப்பை ஊட்டும் என்றும் விஷ்ணு கூறியுள்ளார்.

    English summary
    The sports drama, Bigil, which marks the return of the Vijay and Atlee combination after Mersal, further marks the return of yet another familiar collaboration. GK Vishnu, who cranked the camera for Mersal, has lensed Bigil too.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X