கசந்தது காதல்.. நடிகையை விவாகரத்து செய்த ஒளிப்பதிவாளர்.. சிம்பிளாக நடந்த மறுமணம்!

சென்னை: திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள். அப்படி பார்த்து பார்த்து நடக்கும் திருமணங்கள் இன்று பாதியிலேயே பிச்சிக்கொண்டு போய்விடுவதுதான் வேதனையிலும் வேதனை.

அப்பா, அம்மா காலத்தில் அங்கொன்று, இங்கொன்றுமாக நாம் கேட்டு வந்த விவாகரத்து சமாசாரங்கள். இன்று தொட்டதுக்கு எல்லாம் விவாகரத்து என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது. இதற்கு புரிதல் இல்லை, காதல் இல்லை, மரியாதை இல்லை என்று அடுக்கடுக்காக பல காரணம் சொன்னாலும். யாருக்கும் பொறுமை இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அப்படித்தான் மலையாள நடிகையை உருகி உருகி காதலித்த ஒளிப்பதிவாளர், அந்த காதல் கசந்து போக தற்போது இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

cinematographer Jomon T John gets married to Ansu Elsa in Kerala

ஒளிப்பதிவாளர் ஜோமான் டி ஜான்: தமிழ், மலையாளம், இந்தி படங்களில் படு பிஸியான ஒளிப்பதிவாளராக இருக்கும் ஜோமான் டி ஜான், மலையாள நடிகை ஆன் அகஸ்டினை உருகி உருகி காதலித்தார். பல இடங்களில் காதல் புறாவாக சுற்றி வந்த இவர்களின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிந்ததை அடுத்த 2014ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒத்துப்போகாததால், 2020ம்ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இரண்டாம் திருமணம்: இந்நிலையில், ஒளிப்பதிவாளர் ஜோமான் டி ஜான், அனுஷா எல்ஸா வர்கீர்ஸ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். ஜோமோன் டி ஜான் மற்றும் அனுஷாவின் திருமணம் கேரளாவில் உள்ள குமரகோம் பகுதியில் சிம்பிளாக நடைபெற்றது. ஒளிப்பதிவாளர் ஜோமோனுக்கு பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், நடிகை கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

துருவநட்சத்திரம்: ஒளிப்பதிவாளரான ஜோமான் டி ஜான், மலையாளத்தில் சார்லி,என்னு நிண்டே மொய்தீன் உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றி உள்ளார். தமிழில் சசிகுமார் நடித்த பிரம்மன் படம் மூலமாக தமிழில் நுழைந்தவர். அதன் பிறகு கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான என்னை நோக்கி பாயும் தோட்டா படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் பல ஆண்டுகளாக வெளியாகாமல் இருக்கும் துருவநட்சத்திரம் படத்திலும் பணியாற்றி உள்ளார்.

படங்களில் பிஸி: இவர் தமிழ், மலையாளம் மட்டுமில்லாமல் ஹிந்தியிலும் இவர் மோஸ்ட் வான்டெட் ஒளிப்பதிவாளராக மாறி உள்ளார். பாலிவுட்டில் ஹிட்டடித்த சூர்யவன்சி, சர்க்கஸ் உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனுஷ்கா நடிப்பில் தெலுங்கில் வெளியான மிஸ் ஷெட்டி மிஸஸ் பாலிஷெட்டி படத்திற்கும் இவர் தான் ஒளிப்பதிவாளர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X