கபீர் லால் முதன் முறை இயக்கும் அகோச்சரா...பார்வையற்ற பெண்ணாக இஷா!

ஹைதராபாத் : இஷா சாவ்லா ஒரு பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார், அவர் வரவிருக்கும் அகோச்சரா படத்தில் தனது சகோதரியின் மரணத்தை கண்டுபிடிப்பது தான் முக்கிய வேலை .

தன்னமிக்கையுடன் செயல்படும் டெல்லி அழகி இஷா சாவ்லா தனது நடிப்பு திறனுடன் தெலுங்கு சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளார். புது புது படைப்பாளிகளை தேர்ந்து எடுத்து தன் திறமைகளை காட்ட முன் வந்துள்ளார் .

வரவிருக்கும் படமான அகோச்சராவில் பார்வையற்ற பெண்னின் பாத்திரத்தை அவர் மிகவும் துணிச்சலுடன் நடித்து மிகவும் மெனக்கெட்டு உள்ளார் .

ஒளிப்பதிவாளர் கபீர்

ஒளிப்பதிவாளர் கபீர்

இந்த கதாபாத்திரம் பல விதமான பிரதிபலிப்புகளை ஏற்படுத்தும் மற்றும் படத்தில் சில காட்சிகள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு கதாபாத்திரம் அமைந்து இருக்கும் . இப்படத்தை ஒளிப்பதிவாளர் கபீர் லால் இயக்குகிறார் , இயக்குனராக இதுவே அவருக்கு முதல் படம் .

மெய்சிலிர்த்தது

மெய்சிலிர்த்தது

இந்த பாத்திரத்தைப் பற்றி மகிழ்ச்சியடைந்த இஷா, கபீர் லால் பற்றி கூறியது என்னவென்றால் "கபீர் எனது நீண்ட கால நண்பராகவும் தனது நலம் விரும்பியாகவும் அறிந்திருக்கிறேன், அவருடன் பணியாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஸ்கிரிப்ட் படித்த போது எனக்கு மெய்சிலிர்த்தது. மற்றும் நான் இந்த வேலை செய்வதில் மிகவும் உற்சாகமாக இருந்தேன். இந்த பாத்திரம் என்னிடம் வர நான் காத்திருப்பது போல் இருந்தது. கதையை கபீர் விவரித்தபோது, ​​நான் பரவச நிலை அடைந்தேன் , ஒரு நொடி கூட யோசிக்காமல் இந்த கதையில் நடிக்க ஒப்புக்கொண்டேன் .

 உடல் ரீதியாகவும்

உடல் ரீதியாகவும்

இஷாவின் இந்த கதாபாத்திரம் முக்கியமானது என்பதை புரிந்து அவர் பல முயற்சிகளை மேற்கொண்டு உள்ளார் . கதாபாத்திரத்தின் ஆழம் புரிந்து சரியாக உள்வாங்கி உணர்வுபூர்வமாக நடித்து உள்ளார் . இதைப் பற்றி பேசுகையில் " பார்வையற்ற கதாபாத்திரத்தில் நடிப்பது மன ரீதியாக மட்டுமல்ல, உடல் ரீதியாகவும் , உணர்ச்சி ரீதியாகவும் சவாலாக உள்ளது. என் கதாபாத்திரம் - அவளுடைய உள் வலிமையால் உலகை வெல்வதை நம்புகிறது. இது என் வாழ்க்கையின் சிறந்த அனுபவங்களில் ஒன்றாக இருக்கும். " என்று சொல்லி முடித்தார் .

லவ்-ரிவெஞ்ச் த்ரில்லர்

லவ்-ரிவெஞ்ச் த்ரில்லர்

சைக்காலஜிஸ்டாக இருக்கும் கணவரின் கதாபாத்திரத்தை நடிகர் கமல்ராஜு நடித்து உள்ளார் . அகோச்சரா படம் ஒரு லவ்-ரிவெஞ்ச் த்ரில்லர் படம். ஒரு சம்பவம் பல கதாபாத்திரங்களின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றுகிறது என்பது திரைப்படத்தின் கதைக்களத்தை முழுமையாக உருவாக்குகிறது. தற்போது, இந்த படத்தின் படப்பிடிப்பு டெஹ்ராடூனில் உள்ள அழகான ரிசார்ட்டில் படமாக்கி வருகின்றனர். லவ்லி வேர்ல்ட் புரொடக்‌ஷனஸ் தயாரிப்பில் உள்ள இப்படம் ஜூன் மாதத்தில் வெளியாக உள்ளது.

ஸ்பானிஷ்

ஸ்பானிஷ்

வித்யாசமான கதையினால் மிகவும் பிரபலம் அடைந்த ஸ்பானிஷ் படமான " ஜூலியா ஐஸ் " நான்கு இந்திய மொழிகளில் வர இருக்கிறது . தமிழில் கணேஷ் வெங்கட்ராம் மற்றும் பார்வதி நாயர் நடிக்க படத்திற்கு "உன் பார்வையில்" என்று பெயர் வைத்து உள்ளனர். மராட்டி , பெங்காலி , தமிழ் , தெலுங்கு என்று பல மொழிகளில் அந்த அந்த ஊர் வட்டார வழக்கப்படி திரைக்கதை அமைத்து வெளிவர இருக்கிறது . இஷா சாவ்லா ஒரு பார்வையற்ற பெண்ணாக தெலுங்கு ரீமேக்கில் நடித்து அசதி இருக்கிறார் என்பது குறிப்பட்டதக்கது .

More from Filmibeat

Read more about: kabir lal isha
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X