லியோ படத்துல அந்த கார் சேஸிங் சீனை எப்படி எடுத்தோம் தெரியுமா?.. ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஓபன்!
சென்னை: ஈரம் படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை அறிமுகப்படத்திலேயே வென்றவர் தான் மனோஜ் பரமஹம்சா. பி.சி. ஸ்ரீராம், சந்தோஷ் சிவன், ரவிவர்மன் என தமிழ் சினிமாவில் பல திறமையான ஒளிப்பதிவாளர்கள் உள்ளனர். அவர்களின் வரிசையில் சமீப காலமாக ஒளிப்பதிவில் கலக்கிக் கொண்டிருக்கும் மனோஜ் பரமஹம்சா சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் லியோ படத்தில் எப்படியெல்லாம் டெக்னாலஜியை பயன்படுத்தினோம் எனக் கூறியுள்ளார்.
ஈரம், விண்ணைத் தாண்டி வருவாயா, நடுநிசி நாய்கள், நண்பன், எனை நோக்கி பாயும் தோட்டா, சில்லுக்கருப்பட்டி, ராதே ஷ்யாம், பீஸ்ட், பிரின்ஸ், லியோ, குண்டூர் காரம், மின்மினி உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியான சில்லுக்கருப்பட்டி படத்தைத் தொடர்ந்து இந்த வாரம் வெளியாகவுள்ள மின்மினி படத்திற்கும் இவர் தான் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராதே ஷ்யாம் மேஜிக்: பிரபாஸ், பூஜா ஹெக்டே நடித்த ராதே ஷ்யாம் படத்தில் க்ரீன் மேட்டை தாண்டி எல்இடி லைட்ஸ் யூஸ் பண்ணி புதுசா ஒரு விஷயத்தை செய்ததாக மனோஜ் பரமஹம்சா கூறியுள்ளார். லண்டனுக்கே போகாமல் லண்டன் சாலையை உருவாக்கி காட்டினேன் பிரபாஸ் அப்படியே ஷாக் ஆகி விட்டார் என்றார். அதே போல அந்த டிரெய்ன் சீனில் வழக்கத்துக்கு மாறாக ஹாரிஸாண்டல் 360 டிகிரியில் கேமரா சுத்துவது போன்ற காட்சியை எடுக்க ஏகப்பட்ட வொர்க் செய்து பிசிக்ஸ் மூலமாக அந்த காட்சியை சாத்தியமாக்கினேன் என்றார்.

லியோ கார் சேஸிங் ஃபைட்: லியோ படத்தில் இடம்பெறும் கார்களை நடிகர் விஜய் பைக் மூலம் சேஸ் செய்யும் காட்சி ஒரே அறையில் மோக்கோபாட் கேமரா மூலமாக படமாக்கப்பட்டது. அதற்கு ஒரு காட்சிக்கும் இன்னொரு காட்சிக்கும் எண்டே இல்லாமல் அடுத்த அடுத்த சீனை கொண்டு வந்து நிறுத்தும் படியாக ஆரம்பித்ததில் இருந்து அசுர வேகத்தில் அந்த காட்சியை படமாக்க ப்ரீ புரொடக்ஷன் பணிகளை அதிகம் செய்தோம். அனிமேஷன் காட்சிகளை எல்லாம் உருவாக்கிய பின்னர் தான் லைவ் ஷூட்டிங்கே செய்யப்பட்டது என்றார். தளபதி விஜய் அந்த சீனை பார்த்து விட்டு ரொம்பவே சர்ப்ரைஸ் ஆனார் என்றார்.

அடம்பிடித்த மகேஷ் பாபு: குண்டூர் காரம் படத்தில் சூரியன் போல ஒரு விஷயத்தை ஜூம் ஷாட்டில் செய்திருந்தேன். அதை பார்த்து விட்டு ரொம்பவே சூப்பரா இருக்கு என சொன்ன மகேஷ் பாபு இதே போல ஃபுல் பிரேமில் வேண்டும் என்று அடம்பிடித்தார். அந்த இடத்தில் அதற்கு மேல் பண்ண முடியாது என்றும் அதற்காக ஸ்டூடியோவிற்கு வரும்படி சொன்னேன். அந்த ஸ்டூடியோவிற்கே அவர் வந்து எல்இடி லைட்ஸ் பயன்படுத்தி அந்த ஷாட்டை எடுத்துக் கொடுத்தேன் என்றார்.
ஹாலிவுட் லெவல் மேக்கிங்: ஹாலிவுட் படங்கள் எல்லாம் தற்போது இப்படித்தான் உருவாக்குகின்றனர். நம்மிடமும் அந்த டெக்னாலஜி புழக்கத்தில் வந்து விட்டது. இன்னமும் கொஞ்சம் பெரிதாக செட் போட முயன்றால் அதற்கான நிதி கிடைத்தால் இங்கேயும் பல பிரம்மாண்ட படங்களை உருவாக்க முடியும் என மனோஜ் பரமஹம்சா கூறியுள்ளார். பெரிய விஷுவல் எபெக்ட்ஸ் எல்லாம் சிஜியை தாண்டி பல தொழில்நுட்பங்களுடன் உருவாகி வருவதை அழகாக எடுத்துரைத்துள்ளார் மனோஜ் பரமஹம்சா.


Click it and Unblock the Notifications











