பெரும் படைப்பாளி.. தனித்த ஆளுமை.. பி.எஸ். நிவாஸ் மறைவால் அதிர்ச்சி.. திரையுலகினர் இரங்கல்!

By

கொச்சி: பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான நிவாஸ் கேரளாவில் மரணமடைந்ததை அடுத்து திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரபல ஒளிப்பதிவாளர் பி.எஸ்.நிவாஸ். பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலேயே படம் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார்.

சென்னையில் உள்ள அடையாறு திரைப்பட கல்லூரியின் முன்னாள் மாணவர் இவர்.

நிறம் மாறாத பூக்கள்

நிறம் மாறாத பூக்கள்

பாரதிராஜாவுடன் இணைந்து, கிழக்கே போகும் ரயில் (1978), சிகப்பு ரோஜாக்கள் (1978), புதிய வார்ப்புகள் (1979) உட்பட ஐந்து படங்களில் பணியாற்றியுள்ளார். கோழி கூவுது, நிறம் மாறாத பூக்கள், எனக்காக காத்திரு, நிழல் தேடும் நெஞ்சங்கள் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கல்லுக்குள் ஈரம்

கல்லுக்குள் ஈரம்

பாரதிராஜா, சுதாகர், அருணா, விஜயசாந்தி நடித்த 'கல்லுக்குள் ஈரம்' படத்தின் மூலம் இயக்குநராகவும் மாறினார் நிவாஸ். செவ்வந்தி, நிழல் தேடும் நெஞ்சங்கள் உட்பட சில படங்களை இயக்கினார். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி படங்களில் பணியாற்றியுள்ள நிவாஸ், மோகினியாட்டம் என்ற மலையாளப் படத்துக்காக தேசிய விருது பெற்றவர்.

அரசு மருத்துவமனை

அரசு மருத்துவமனை

தமிழ் திரையுலகில் 1980-களில் முன்னணி ஒளிப்பதிவாளராக இருந்த பி.எஸ்.நிவாஸ் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் உடல் நிலை காரணமாக கடந்த ஒரு மாதமாக கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவருக்கு வயது 80.

பெரும் படைப்பாளி

பெரும் படைப்பாளி

இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், என் திரைப் பயணமான 16 வயதினிலே முதல் தொடர்ந்து ஐந்து வெற்றிகளுக்கு துணை நின்ற பெரும் படைப்பாளி, இந்திய திரை உலகின் மிகச் சிறந்த ஒளிப்பதிவாளர், என் நண்பன் நிவாஸ் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்கள் என்று தெரிவித்துள்ளார் .

செல்லக் குழந்தை

செல்லக் குழந்தை

தங்கர்பச்சான் வெளியிட்டுள்ள இரங்கலில், பி.எஸ். நிவாஸ், இந்திய சினிமாவில் பல்வேறு மொழிகளில் தனித்த ஆளுமையுடன் விளங்கிய ஒளிப்பதிவாளர், இயக்குநர். அவரது பங்களிப்பு குறித்து இத்தலைமுறை அறியாது. இந்திய சினிமாவில் பலப்பல ஆளுமைகளை உருவாக்கிய அடையாறு திரைப்படக் கல்லூரி மேலும் ஒரு செல்லக் குழந்தையை இழந்துள்ளது என்று கூறியுள்ளார். இயக்குனர் சங்கீத் சிவன் உட்பட பல திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X