மணிரத்னம் படம் வெளியானால் தியேட்டர்கள் எரிக்கப்படும்.. ராஜீவ் மேனன் ஓபன் டாக்

சென்னை: இந்திய சினிமாவையே வியக்க வைத்தவர் மணிரத்னம். இவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிய நான் நீ என இளைஞர்கள் போட்டி போட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவர் படத்தில் ஒரு சிறிய ரோல் கிடைத்தால் போதும் என் வாழ் நாள் கனவு நிறைவேறிடும் என்ற ஆசையோடு சினிமா பிரபலங்களும் தவம் கிடக்கின்றனர். இந்த சூழலில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி ஹிட் அடித்த ஒரு படத்தை மீண்டும் வெளியிட்டால் சர்ச்சையாகும் என பிரபல ஒளிப்பதிவாளர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ரோஜா படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் மணிரத்னம் இரண்டாவது முறையாக அரவிந்த்சாமியை வைத்து பம்பாய் என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் மனிஷா கொய்ராலா, நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படம் மும்பை கலவரத்தை மையப்படுத்தி வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டை பெற்ற படமாகவும் வெற்றி பெற்றது. மேலும், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இப்படம் நான்காவது படமாகும். இப்படத்தில் இடம்பெற்ற உயிரே உயிரே, கண்ணாளனே கண்ணாளனே, அந்த அரபிக் கடலோரம் போன்ற பாடல்கள் எவர்க்ரீன் ஹிட் பாடல்களாக இருக்கின்றன. இப்படத்திற்கு விடுதலை படத்தில் வில்லனாக நடித்த ராஜீவ் மேனன் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருந்தார். 1995ஆம் ஆண்டு வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றி படமாகவும் இருந்தன. இப்படத்தின் மூலம் மணிரத்னம் ஜீனியஸ் என்று அனவைராலும் பாராட்டை பெற்றார்.

cinematographer-rajiv-menon-said-that-theaters-will-be-burned-if-the-film-bombay-is-released

தியேட்டர்கள் எரிக்கப்படும்: பாபர் மசூதி இடிப்புக்கு பிறகு நாடு முழுவதும் கலவர பூமியாக இருந்தது. வன்முறை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு மணிரத்னம் இயக்கியிருந்தார். படம் வெளியான நேரத்தில் பெரும் சர்ச்சைகளை சந்தித்த படமாக பம்பாய் இருக்கிறது. இந்து பையனும் முஸ்லீம் பெண்ணும் காதலித்து திருமணம் செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், இப்படத்தின் ஒளிப்பதிவாளரான ராஜீவ் மேனன் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, "பம்பாய் போன்ற ஒரு படம் தற்போது வெளியானால் தியேட்டர்கள் எரிக்கப்படும். அந்த அளவிற்கு சகிப்புத்தன்மையற்ற நாடாக மாறியிருக்கிறது. இந்தியாவில் முன்பு போன்ற சாதாரண சூழல் தற்போது நீடிக்கவில்லை. மதம் மிகப்பெரிய சக்தியாக மாறிவிட்டது. அது ஒரு பிரச்னைக்குரிய இடமாக மாறியிருக்கிறது" என தெரிவித்துள்ளார்.

cinematographer-rajiv-menon-said-that-theaters-will-be-burned-if-the-film-bombay-is-released

30 ஆண்டுகள்: பம்பாய் படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால், இந்தியாவில் முன்பு இருந்த சூழல் தற்போது இல்லை. இந்தியர்களிடம் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது. கண்டிப்பாக கூற முடியும் பம்பாய் படம் தற்போது வெளியானால் நான் சொன்ன நிகழ்வு நடக்கும் என மீண்டும் தெரிவித்தார். மேலும், உயிரே உயிரே பாடல் உருவான விதம் குறித்து பேசிய ராஜீவ் மேனன், எனது அப்பா கடற்படையில் அவரது நண்பர்கள் இருந்ததால் இப்பாடலை எடுக்க உதவியாக இருந்தது. இப்போதும் அதுபோன்ற பாடலை எடுப்பது கடினம். உயிரே உயிரே பாடலில் ஒரே இடத்தில் நாயகன் இருப்பார். அவரது காதலை புரிந்து கொண்டு நாயகி தேடி ஓடி வர வேண்டும். இதில் மற்றொரு சுவாரஸ்யமானது என்னவென்றால் மனிஷா கொய்ராலாவின் நீல நிற உடைதான். இந்த பாடல் இன்னும் சிறப்பாக அமைவதற்கு காரணமாக இருந்தது என ராஜீவ் மேனன் தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X