ஒளிப்பதிவாளர் ரவி வர்மன்.. 20 ஆண்டு சாதனை பயணம்..கொண்டாடும் கேமரா காதலர்கள் !

சென்னை : ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட பன்முகப்பட்ட திரையுலகங்களில் 20 ஆண்டுகள் நிறைவு செய்திருக்கிறார். இவர் பன்முகதிறமையாளர், ஒரு சிறந்த இயக்குனர், ரசனையான ஒளிப்பதிவாளர், திரைப்பட தயாரிப்பாளர், மற்றும் எழுத்தாளர் என பல்வேறு திறமைகளுக்கு சொந்தக்காரர்.

மணி ரத்னம், சஞ்சய் லீலா பன்சாலி, ராஜ்குமார் ஹிரானி, அனுராக் பாசு, இம்தியாஸ் அலி, பிரியதர்ஷன், ஷங்கர், கௌதம் மேனன், பிரபு தேவா, கே எஸ் ரவிக்குமார், பிரசாந்த் நீல் தேஜா, சுஷி கணேசன், டுவேன் அட்லர், ரேவதி, ராஜீவ் குமார், ஜெயராஜ், ரஃபி மெக்கார்டின், சஜி கலியாஷ் மற்றும் பல சிறந்த இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றியது அவரது திறமை மற்றும் விளக்கக்காட்சிக்கு சான்றாக விளங்குகிறது.

ரவி வர்மன்

ரவி வர்மன்

இந்த 20 ஆண்டுகால திரையுலக வாழ்வில் சிறப்பான 32 க்கும் மேற்பட்ட இயக்குனர்களுடனும், 35 பிற படங்களிலும், 400 விளம்பரப்படங்களிலும் பணியாற்றிய பெருமைக்குரியவர். இவரது லென்ஸ் ஒரு தனி கலவையான காட்சிகளை கொடுக்கும் . இவர் கையாளும் லென்சுகளும் கேமராக்களும் தனி பெருமை பெரும் .

மாஸ்கோவின் காவேரி

மாஸ்கோவின் காவேரி

ஆஸ்கர் பிலிம்ஸ் வி ரவிச்சந்திரன் தயாரித்த ‘மாஸ்கோவின் காவேரி' (2010) மூலம் அவர் தன்னை ஒரு எழுத்தாளராகவும் இயக்குனராகவும் அடையாளம் காட்டினார். இப்படத்தின் மூலமாக தான் நடிகை சமந்தா ரூத் பிரபு மற்றும் இசையமைப்பாளர் தமன் ஆகியோர் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பல விருதுகள்

பல விருதுகள்

அவரது திறமைகளுக்கு 23வது ஈஎம்ஈ சர்வதேச விருது, மாநில விருதுகள், பிலிம் ஃபேர் விருதுகள், ஐஃபா விருதுகள், ஸ்க்ரீன் விருதுகள் மற்றும் பல அங்கீகாரங்கள் சான்றாக இருக்கின்றன. தனக்கு என்று ஒரு தனி ஸ்டைல் உருவாக்கி பல சினிமாக்களை மெருகேத்தி ரசிகர்களை வியப்படைய செய்தவர்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

தமிழ் திரையுலகம் வண்ணமயமான நினைவுகளை உருவாக்கிய ஒளிப்பதிவாளர் ரவி வர்மனின் 20 ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது. நிறைய பிரபலங்கள் ரவி வர்மாவுக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர். தொடர்ந்து பல மொழி படங்கள் இவர் செய்ய வேண்டும் என்று இவரது சிஷ்யர்கள் கேமரா காதலர்கள் இவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். மேலும் இந்த லாக் டவுன் சமயத்திலும் நிறைய ஒளிப்பதிவாளர்களுக்கு ரவி வர்மா ஒரு எடுத்துக்காட்டாக உள்ளார். இவரை காதலிக்கும் இவரது சிஷ்யர்கள் இவரது படங்களை பார்ப்பதும், பல விதமான கேமரா யுக்திகளை கையாள்வதும் தொடந்த வண்ணம் உள்ளது . நல்ல படைப்பாளிகள் என்றுமே போற்றப்படுவர்கள். அப்படி ரவி வர்மன்னின் ஒவ்வொரு படைப்பு உழைப்பும் காலம் கடந்தும் பேசும் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X