வேற லெவல் சார்... யோகிபாபுவுடன் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் 'தர்பார்' செல்பி
சென்னை: காமெடி நடிகர் யோகிபாபுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்.
இந்தியாவின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் சந்தோஷ் சிவன். இயக்குனர் மணிரத்னம் இயக்கிய தளபதி, இருவர், ராவணன், செக்க சிவந்த வானம், விஜய் நடித்த துப்பாக்கி, சூர்யாவின் அஞ்சான், மகேஷ்பாபு நடித்த ஸ்பைடர் உட்பட ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
த டெர்ரரிஸ்ட், மல்லி, உருமி, இனம் உட்பட சில படங்களை இயக்கியும் உள்ள சந்தோஷ் சிவன், இப்போது ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

யோகி பாபு
தர்பார் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார் யோகிபாபு. தமிழில் பிசியான காமெடியனாக நடித்துவரும் யோகி பாபுவின் கால்ஷீட்டுக்காக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே காத்திருந்தார் என்று கூறப்பட்டது.

செல்ஃபி புகைப்படம்
இந்நிலையில் இந்தப் படத்தின் சில பேட்ச் ஒர்க் காட்சிகள் கடந்த மாதம் எடுக்கப்பட்டன. அப்போது ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், யோகிபாபுவுடன் செல்ஃபி புகைப்படம் எடுத்துள்ளார்.
கருப்பு வெள்ளை
கருப்பு வெள்ளையில் கலக்கலாக எடுக்கப்பட்டுள்ள இந்த செல்ஃபி புகைப்படத்தை, தனது சமூக வலைத்தளத்தில் அவர் இன்று வெளியிட்டார். அதை தன் பக்கத்தில் ஷேர் செய்துள்ள யோகி பாபு, அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இது வேற லெவல்
இதற்கு கமென்ட் அடித்துள்ள ரசிகர்கள், 'உங்க கைபட்டா செல்ஃபியே சிறப்பா மாறிடுது' என்று தெரிவித்துள்ளனர். இது வேற லெவல் செல்ஃபி என்றும் யோகியுடன் யோகி என்றும் கமென்ட் அடித்துள்ளனர். இதை ரசிகர்கள் அதிகமாக லைக் செய்துள்ளர்.


Click it and Unblock the Notifications











