அமலா பால் அந்த காட்சியில் நடிக்கும் போது..9 பேர் மட்டுமே இருந்தோம்.. ஆடை ஒளிப்பதிவாளர் பேட்டி!

சென்னை: ஆடை படத்தில் அமலா பால் நிர்வாண காட்சி படமாக்கப்பட்ட போது 9 பேர் மட்டுமே இருந்தோம் என ஒளிப்பதிவாளர் பேட்டியில் கூறியுள்ளார்.

ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடித்த திரைப்படம் ஆடை. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான போதே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது.

cinematographer Vijay Karthik Kannan shared intresting infotmation about Amala Paul Aadai

அமலா பால் படம் முழுக்க அரை நிர்வாணமாக நடித்தாலும் அதனை ஆபாசமாக பார்க்கும் எண்ணம் நமக்கு ஏற்படவில்லை. இருந்தாலும், இப்படம் அமலா பாலின் கேரியரை மொத்தமும் காலி செய்தது.

ஆடை: பெண்களின் உடல் குறித்து நமக்கு இருக்கும் எண்ணத்தை மாற்றும் படமாக ஆடை படம் இருக்கும் என்ற எண்ணத்தில் உருவான திரைப்படம் தான் ஆடை. இதில் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் மற்றும் படத்தொகுப்பாளர் ஷாபிக்யூ முகமத் அலி இணைந்து பணியாற்றியுள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான இப்படம் தோல்விப்படமாக அமைந்தது.

ஒளிப்பதிவாளர் பேட்டி: ஆடை, டாக்டர், ஜெயிலர் படத்தில் ஒளிப்பதிவாளரான விஜய் கார்த்திக் கண்ணன், யூடியூப் சேனல் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்திருந்தார். அதில், ஆடை படத்தில் நிர்வாணகாட்சியை படமாக்கியது மிகவும் சவாலாக இருந்தது. படத்தில் அந்த பெண் நிர்வாணமாக இருக்கிறார் என்று தெரியவேண்டும். அதற்காக ஆபாசமாகவும் வந்துவிடக்கூடாது என்று மிகவும் மெனக்கெட்டோம்.

சவாலாக இருந்தது: இதற்காக பல ஆங்கில படத்தை ரெபரன்சிற்காக பார்த்தோம் ஆனால், அது திருப்தியை தரவில்லை. இதனால், முதலில் போட்டோஷூட் செய்து பிளான் போட்டோம். பொருளை வைத்து உடலை மறைப்பது, அவுட் ஆஃப் போகஸில் காட்டுவது, ஓடுவது என இந்த காட்சியைத் காட்ட முடியும். இந்த காட்சிகளை எப்படி போர் அடிக்காமல் கொடுப்பது என்று முடிவு செய்து, கண்,கை, கால் என தனித்தனியாக கிளாசப்ஸ் ஷாட் எடுத்தோம்.

9 பேர் இருந்தோம்: ஒரு காட்சியில் அமலா பால், உடையே இல்லாமல் உமர்ந்து இருப்பார். ஆனால், அந்த காட்சியில் கொஞ்சம் கூட ஆபாசமே தெரியாது. அந்த காட்சியை கிட்டத்தட்ட 16 மணி நேரம் எடுத்தோம், படப்பிடிப்பு நடக்கும் போது, நான், இயக்குனர், ட்ராலி ஆபரெட்டர், ஸ்டெடி கேம் ஆபரேட்டர், என்னுடைய உதவியாளர் என மொத்தமாக 9 பேர் தான் இருந்தோம். அமலா பால், உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் சோர்ந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். நிர்வாணமாக நடிக்க அமலா ஒப்புக் கொள்ளவில்லை என்றால், அந்த படமே செய்திருக்க முடியாது என்று ஒளிப்பதிவாளர் பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X