குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்த சமந்தா.. டிரெண்டாகும் புகைப்படம்!

சென்னை : நடிகை சமந்தா சிட்டாடல் படக்குழுவினருடன் இணைந்து செர்பியாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து பேசியுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் டிரெண்டாகி வருகிறது.

சிட்டாடல் தொடரின் இந்தியப் பதிப்பு முழுவீச்சில் தயாராகி வருகிறது. இதில் நடிகை சமந்தா வருண் தவானுடன் இணைந்து இத்தொடரில் ரகசிய உளவாளியாக நடித்து வருகிறார்.

ஆங்கிலத்தில் ஏப்ரல் மாத இறுதியில் பிரியங்கா சோப்ரா - ரிச்சர்ட் மெய்டன் நடிப்பில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான இத்தொடர் நல்ல வரவேற்பை பெற்றது.

citadel web series crew meet the president of india draupadi murmu

சமந்தாவின் அடுத்த படம் : நடிகை சமந்தா சாகுந்தலம் படத்தை அடுத்து விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக குஷிப்படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் உருவாகும் இப்படத்தை தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து ரிலீஸ் செய்ய உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முஸ்லீம் பெண்ணாக நடிகை சமந்தா நடித்துவருகிறார்.

சிட்டாடல் : அதோடு ஃபேமிலி மேன் 2 இயக்குனர்களான ராஜ் மற்றும் டிகே இயக்கி வரும் சிட்டாடல் என்ற வெப் தொடரில், வருண் தவானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த தொடர் ஹாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா நடித்த சிட்டாடல் என்ற வெப் தொடரின் இந்தி ரீமேக் ஆகும். மேலும் இந்த வெப் தொடரில் நடிகை பிரியங்கா சோப்ரா கவர்ச்சியில் குறைவைக்காமல் படுக்கையறை காட்சியில் நடித்து ரசிகர்களை அலறவிட்டிருந்தார்.

citadel web series crew meet the president of india draupadi murmu

அதிரடி ஆக்ஷன் கதை : ஆக்‌ஷன் ஜானரில் உருவாகும் இந்த வெப் சீரிஸில் சமந்தாவின் கதாபாத்திரம் செம்ம வெயிட்டாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அதேநேரம், அவர் பிரியங்கா சோப்ராவின் அம்மாவாக நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கதையில் வரும் பிளாஷ்பேக் காட்சிகளில் சமந்தா, வருண் தவான் நடிக்கவுள்ளார்களாம். சிட்டாடல் படப்பிடிப்பு தற்போது செர்பியாவில் நடைபெற்று வருகிறது.

திடீர் சந்திப்பு : இந்நிலையில், இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செர்பியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், சிட்டாடல் படக்குழுவினர் திரௌபதி முர்முவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில், வருண் தவான், சமந்தா மற்றும் சிட்டாடல் படக்குழுவினர் திரௌபதி முர்முவை சந்தித்த போது புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படத்தை நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஷேர் செய்து நன்றி மேம் என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X