2.0 படத்தில் 3.0: இன்ப அதிர்ச்சி கொடுத்த குட்டி ரோபோ #2.0
Recommended Video

சென்னை: 2.0 படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு என்ன வேலை என்பது தெரிய வந்துள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் அசத்தியுள்ள 2.0 படம் இன்று பிரமாண்டமாக ரிலீஸாகியுள்ளது. எந்திரன் படத்தை போன்று இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் இல்லை.

இந்த படத்திலும் ஐஸ்வர்யா ராய் இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்த ரசிகர்களுக்காக ஷங்கர் விளக்கம் அளித்தார். அதாவது 2.0 படத்தின் கதை, கதாபாத்திரங்கள் வித்தியாசமானது என்பதால் ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்கவில்லை என்றார் ஷங்கர்.
இந்நிலையில் இன்று வெளியான 2.0 படத்தில் ஐஸ்வர்யா ராயின் வாய்ஸ் மட்டும் தான் வருகிறது. படம் துவங்கிய உடனேயே அக்ஷய் குமார் தற்கொலை செய்வது போன்று காட்டியுள்ளனர்.
சிட்டியும், அக்ஷய் குமாரும் மோதும் காட்சிகள் அருமை. எந்திரனை போன்றே இந்த படத்திலும் சிட்டிக்கு பேட்டரி பிரச்சனை. என்ன ஷங்கர் சார், அந்த பேட்டரியை கொஞ்சம் சரிபார்த்திருக்கக் கூடாதா?
* படத்தில் அக்ஷய் குமாரின் பெயர் பக்ஷிராஜன். பேராசிரியர். அவருக்கு ஜெயபிரகாஷ் டப்பிங் பேசியுள்ளார். அவரின் வாய்ஸ் அக்ஷய்க்கு செட்டாகவில்லை.
* சிம்பிளான கதையை எடுத்துக் கொண்டு பிரமாண்டமாக அளித்துள்ளார் ஷங்கர். முதல் பாதி விறுவிறுப்பாக சென்றது. விஷுவல் எஃபெக்ட் வேற லெவல். ஷங்கரால் மட்டுமே இப்படி ஒரு படத்தை கொடுக்க முடியும்.
* 2.0 படத்தில் 3.0 என்று கூறி ரஜினியை குட்டி ரோபோவாக காட்டியுள்ளது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது. 3.0 படம் எடுக்கும் ஐடியா உள்ளது என்று ஷங்கர் தெரிவித்த நிலையில் குட்டி ரோபோவை காட்டியுள்ளனர். இரண்டாம் பாதி எமோஷனலாக உள்ளது.


Click it and Unblock the Notifications











