சிட்டிசன் பட ஹீரோயின் வசுந்தரா தாஸ்.. இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?
சென்னை: நடிகர் அஜித் நடித்த சிட்டிசன் பட ஹீரோயின் வசுந்தரா தாஸ் அடையாளமே தெரியாத அளவிற்கு ஓவராக குண்டாகி இருக்கிறார்.
பெங்களுரை பூர்வீகமாக கொண்ட வசுந்தரா தாஸ் நடிகை மட்டுமில்லாமல் ஒருபாடகியும் ஆவார். இவர் ஏராளமான சினிமா பாடல்களையும்,கர்நாடக இசை நிகழ்ச்சியில் பாடி உள்ளார்.
இவர் நடித்தது இரண்டே தமிழ் படம் என்றாலும், இருபடங்களும் முக்கியமான படமாக அமைந்துவிட்டதால், ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டார் வசுந்தரா தாஸ்.

நடிகை வசுந்தரா தாஸ்: 1999ம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கத்தில் வெளியான ஹே ராம் திரைப்படத்தில் கமலின் மனைவி மைதிலியாக நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வசுந்தராவுக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. இதையடுத்து, மலையாளத்தில் ராவணபிரபு என்ற படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்தார்.
அஜித்தின் சிட்டிசன்: அதன் பின் அஜித் பல கெட்டப்புகளை போட்டு அசத்திய சிட்டிசன் படத்தில் நடித்தார். இந்த படமும் இவருக்கு பெயர் சொல்லும் திரைப்படமாக அமைந்தது. சிட்டிசன் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த போதும், தமிழில் வாய்ப்பு வராததால், மலையாளம், கன்னடம், இந்தி படங்களில் நடித்தார். முன்னணி நடிகர்களுடன் நடித்த போதும்,கதையை சரியாக தேர்வு செய்யாததால் பட வாய்ப்பை இழந்தார்.

ஷக்கலக்க பேபி: வசுந்தரா தாஸ் நடிகை மட்டுமில்லாமல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், முதல்வன் படத்தில் ஷக்கலக்க பேபி பாடலை பாடினார். மேலும், ரிதம் படத்தில் இடம்பெற்ற அய்யோ பத்திகிச்சு பாடல்களை பாடியது இவர் தான். வசுந்தரா தாஸ் கதாநாயகியாக நத்த சிட்டிசன் படத்தில் சிக்கிமுக்கு கல்லு, ஏய் பூக்காரா என இரண்டு பாடல்களை பாடினார். இவருக்கு வசீகரமும் அழகும் இருந்த போதும் படவாய்ப்பு சரியாக அமையவில்லை.
அடையாளமே தெரியவில்லை: இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் வசுந்தரா தாஸ், அவ்வப்போது இணையத்தில் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தனது அம்மாவுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவில் அவர் அடையாளமே தெரியாத அளவுக்கு குண்டாக இருக்கிறார். இந்த போட்டோவை பார்த்த இணையவாசிகள் க்யூட்டாக இருந்து வசுந்தராவா இது என கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











