twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மெரினா படத்தை பிற மொழியில் டப் செய்ய பாண்டிராஜுக்கு தடை!

    By Shankar
    |

    சென்னை: மெரினா படத்தை பிற மொழிகளில் டப் செய்ய சென்னை சிட்டி சிவில் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த ஆர்.பாலமுருகன் சென்னை உயர்ந்நீதிமன்றத்தில் உள்ள சிட்டி சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "பசங்க' பட இயக்குனர் பாண்டிராஜ் 'மெரினா' படத்தை இயக்கினார். அதன் தயாரிப்பு செலவுகளை நான் செய்தேன். இருவரது ஒப்பந்தத்தின்படி படத்தின் மூலம் வரும் லாபத்தை சமமாக பங்கிட்டு கொள்ள முடிவு செய்யப்பட்டது.

    படத்தின் இணை தயாரிப்பாளராக விளம்பரங்களில் எனது பெயரை பயன்படுத்துவதாகவும் பாண்டிராஜ் கூறி இருந்தார். ஆனால் அதற்கு மாறாக என் அனுமதி பெறாமல் 'மெரினா' படத்தை வெளியிட்டு விட்டார். இதை எதிர்த்து வழக்கு போட்டேன்.

    வழக்கு விசாரணையில் இருந்தபோது இரு தரப்பிலும் சமரசம் செய்து கொண்டோம். சமரச உடன்பாட்டின்படி பாண்டிராஜ் எனக்கு ரூ. 15 லட்சம் கொடுத்தார். மீதி தொகை குறித்து இருதரப்பிலும் வரவு-செலவு கணக்குகளை ஆடிட்டர் முன்பு தாக்கல் செய்து 60 நாட்களுக்குள் முடிவு எடுப்பதென உடன்பாடு செய்தோம்.

    அந்த உறுதிமொழியை பாண்டிராஜ் மீறி விட்டார். 60 நாட்கள் கடந்து விட்டன. தற்போது டி.வி. உரிமையை தனியார் டி.வி.க்கு கொடுத்து விட்டதாக தெரிகிறது. 'மெரினா' படத்தை மாற்றுமொழியில் மொழி மாற்றம் செய்யவும் முடிவு செய்துள்ளார். எனவே பிற மொழிகளில் படத்தை தயாரிக்கவும் டப்பிங் செய்யவும் தடை விதிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டிருந்தார்.

    இந்த வழக்கு விசாரணை சென்னை 7-வது உரிமையியல் நீதிமன்ற நீதிபதி திருமகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பாலமுருகன் சார்பில் வக்கீல் பாரி ஆஜரானார். 'மெரினா' படத்தை பிற மொழிகளில் ரீமேக் செய்யவும், டப்பிங் செய்யவும் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    English summary
    The Chennai City civil court banned to dub Tamil Movie Marina in other languages.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X