உங்களுக்கும் சினிமாவுல நடிக்க ஆசையா..? அப்போ இந்தப் போட்டில மறக்காம கலந்துக்கோங்க..!
சென்னை சர்வதேச இளைஞர் திருவிழாவையொட்டி மிஸ்டர் மற்றும் மிஸ் சென்னை இண்டர்நேஷ்னல் போட்டி சென்னையில் நடக்கிறது.
சென்னை: மிஸ்டர் மற்றும் மிஸ் சென்னை இண்டர்நேஷ்னல் போட்டி சென்னையில் ஐந்து நாட்கள் நடக்கிறது.
மத்திய அரசின் உதவியுடன் இளைஞர் மேம்பாட்டு கூட்டமைப்பு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சென்னை சர்வதேச இளைஞர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவில் மொத்தம் 170 நிகழ்ச்சிகள் நடைபெறும். இதில் தென்னிந்தியா முழுவதிலும் இருந்து சுமார் 50 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள். அவர்களில் 2985 பேர் வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்கப்படுவர்.

இந்த ஆண்டுக்கான சென்னை சர்வதேச இளைஞர் திருவிழாவையொட்டி மிஸ்டர் மற்றும் மிஸ் சென்னை போட்டி வரும் ஆகஸ்ட் 31ம் தேதியில் இருந்து ஐந்து நாட்கள் சென்னையில் நடக்கிறது. முதல் நாள் தகுதித் தேர்வும், இரண்டாம் நாள் கால் இறுதிச் சுற்றும், மூன்றாம் நாள் அரையிறுதிச் சுற்றும், நான்காம் நாள் இறுதிச்சுற்றும் நடக்க உள்ளது.
ஒவ்வொரு சுற்றும் சென்னையின் வெவ்வேறு இடங்களில் நடக்கிறது. இந்த போட்டியில் திருமணமாகாத 15 வயதில் இருந்து 30 வயதுக்குட்பட்ட இந்திய பெண்களும், அதே வயது வரம்பில் உள்ள இந்திய ஆண்களும் கலந்துகொள்ளலாம். இந்த போட்டிக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 30ம் தேதி கடைசி நாளாகும்.
போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு மிஸ்டர் மற்றும் மிஸ் சென்னை டைட்டில் மட்டுமின்றி, சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











