விஜய் - அஜித் ரசிகர்களிடையே கடும் மோதல்... சென்னை தியேட்டரில் பரபரப்பு!

விஜய் - அஜித் ரசிகர்களிடையே சென்னையில் மோதல் உருவானது.

Recommended Video

Vijay & Ajith fans fight : விஜய் - அஜித் ரசிகர்களிடையே சென்னை தியேட்டரில் மோதல் | Filmibeat Tamil

சென்னை: நடிகர்கள் விஜய் - அஜித் ரசிகர்களிடையே சென்னை தியேட்டரில் மோதல் ஏற்பட்டது.

தமிழ் சினிமா இரு நட்சத்திர போட்டி என்பது காலங்காலமாக தொடர்ந்து வரும் கதை தான். எம்.ஜி.ஆர். - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜித், சிம்பு - தனுஷ், சூர்யா - விக்ரம், விஜய் சேதுபதி - சிவகார்த்திகேயன் என இப்போது வரை தொடர்ந்து வருகிறது.

Clash between Vijay Ajith fans

[கெத்து காட்டும் சூர்யா ரசிகர்கள்: 2017ல் தீயா ஓட்டு போட்ட விஜய் ரசிகாஸ் எல்லாம் எங்கய்யா?]

ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகரை தலைவராக ஏற்று நடப்பது மட்டுமின்றி, அவர்களுக்கு கட்டவுட் வைப்பது, அதற்கு பாலாபிஷேகம் செய்வது என அலப்பறையை கூட்டுவார்கள். அதேபோல் எதிர் நடிகரின் ரசிகர்களை எதிரிகளாகவே பார்ப்பார்கள். தங்களுக்குள் சண்டையும் போட்டுக்கொள்வார்கள். இந்த சண்டையும், ரசிகர் படையும் தான் அந்தந்த நடிகர்களின் மார்க்கெட் நிலவரத்தை தீர்மானிக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் சென்னையில் விஜய் - அஜித் ரசிகர்களிடையே நடந்த மோதல் குறித்த செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு நடிகர்களின் ரசிகர்களும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.

கடந்த 30ம் தேதி காலை சர்கார் திரைப்படத்தின் 50வது நாளை சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி தியேட்டரில் விஜய் ரசிகர்கள் கொண்டாடினர். அப்போது விஸ்வாசம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு கொண்டாட்டமும் அதே தியேட்டரில் நடந்தது.

இதனால் சென்னை ரோகினி தியேட்டரில் ஒரே சமயத்தில் விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் குழுமியிருந்தனர். திடீரென அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். அங்கிருந்த பேனர்களும் கிழிக்கப்பட்டன.

தியேட்டர் நிர்வாகிகள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X