மோகன்லால் வீட்டில் கூடிய நடிகர்-நடிகைகள்: ரஜினி பிரசன்ட், கமல் ஆப்சென்ட்

By Siva

சென்னை: 1980களில் முன்னணி நட்சத்திரங்களாக இருந்தவர்களுக்கு மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தனது சென்னை வீட்டில் பார்ட்டி கொடுத்தார்.

1980களில் முன்னணி நட்சத்திரங்களாக இருந்த நடிகர், நடிகைகள் ஆண்டுக்கு ஒரு முறை சந்தித்து விருந்துண்டு மகிழ்வார்கள். அப்படி ஆண்டுக்கு ஒரு முறை சந்திப்பவர்கள் தங்கள் பழைய நினைவுகளை அசைபோடுவார்கள்.

இந்த ஆண்டுக்கான சந்திப்பு மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் பண்ணை வீட்டில் நடைபெற்றது.

ரஜினி

ரஜினி

கோச்சடையான் வேலையில் பிசியாக இருப்பதால் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது என்று ரஜினி தெரிவித்திருந்தார். ஆனால் கடந்த சனிக்கிழமை மாலை விருந்து நடந்தபோது ரஜினி திடீர் என்று வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

ஜெயராம்

ஜெயராம்

நடிகர் ஜெயராம், கன்னட நடிகர் அம்பரிஷுடன் சேர்ந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் இந்த சந்திப்பில் கலந்து கொள்பவர்கள் தீம் டிரஸ் அணிவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

வெங்கடேஷ்

வெங்கடேஷ்

தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் ஹைதராபாத்தில் இருந்து வந்து விருந்தில் கலந்து கொண்டார்.

சிரஞ்சீவி

சிரஞ்சீவி

தெலுங்கு நடிகரும், அமைச்சருமான சிரஞ்சீவி தனது வேலைகளுக்கு இடையே தவறாமல் வந்து விருந்தில் பங்கேற்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

குரூப் போட்டோ

குரூப் போட்டோ

விருந்தில் நடிகைகள் ராதா, அம்பிகா, ராதிகா சரத்குமார், சுஹாசினி, லிசி, ரேவதி, குஷ்பு, சுமலதா, சரிதா, ரம்யா கிருஷ்ணன், பூர்ணிமா பாக்யராஜ், நதியா, நடிகர்கள் மோகன், சுமன், ரமேஷ் அரவிந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விருந்தில் கமல் ஹாஸனை காணவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X