கரிகாலனுக்கு பொறந்த பொண்ணு கிளியோபாட்ராவா?.. காந்தி கிருஷ்ணாவோட கற்பனையை பாருங்க.. முடியல?

சென்னை: சியான் விக்ரமை வைத்து கரிகாலன் படத்தை இயக்க நினைத்த காந்தி கிருஷ்ணா அந்த படம் ஏன் டிராப் ஆனது என்பது குறித்து சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். மேலும், தான் இயக்க நினைத்த கதை பற்றி அவர் கூறியது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இயக்குநர் சங்கரின் உதவி இயக்குநராக பல படங்களில் பணியாற்றி வந்த காந்தி கிருஷ்ணா விஷால், ரீமா சென், பரத் மற்றும் விவேக்கை வைத்து செல்லமே படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். அந்த படம் அவருக்கு மிகப் பெரிய வெற்றிப் படமாக மாறிய நிலையில், அடுத்ததாக சுஜாதாவின் கதையை ஆனந்த தாண்டவம் என தமன்னாவை வைத்து இயக்கினார்.

Gandhi Krishna Karikalan Cleopatra Vishal Indian 2 Chellame 2

அந்த படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், அதன் பின்னர் சியான் விக்ரமை வைத்து கரிகாலன் படத்தை ஆரம்பித்த காந்தி கிருஷ்ணா சில நாட்களிலேயே அந்த படத்தை டிராப் செய்யும் நிலைமைக்கு சென்றுவிட்டார்.

ஷங்கர் சார் செம ஸ்பீடு: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன், சிவாஜி உள்ளிட்ட பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய காந்தி கிருஷ்ணா, ஷங்கர் ஒரு விஷயத்தை முடிவு செய்துவிட்டால் அதை எப்படியும் முடிக்காமல் விட மாட்டார். படப்பிடிப்பு தளத்தில் செம ஸ்பீடாக செயல்படுவார். ஏதாவது பிரச்சனை என்று அவர் திரும்பிப் பார்த்தாலே நாங்கள் காலி. ஆனால், முடிந்தவரை அவர் சொல்வதற்கு முன்பாகவே அவர் நினைக்கும் விஷயங்களை நானும், வசந்தபாலன், மாதேஷ் உள்ளிட்ட உதவி இயக்குநர்கள் சரியாக செய்து விடுவோம் என்று கூறியுள்ளார்.

Gandhi Krishna Karikalan Cleopatra Vishal Indian 2 Chellame 2

கரிகாலன் கிளியோபாட்ராவின் அப்பாவா?: கல்லணையை கட்டிய கரிகாலன் அந்த கல்லணையை அந்த காலத்தில் எப்படி கட்டினார் என்கிற கேள்வி எனக்குள் எப்போதுமே எழுந்து கொண்டே இருக்கிறது. கரிகாலன் படத்தில் கதையில் கிளியோபாட்ராவின் அம்மா ட்ரைபேனா இந்தியாவுக்கு வருவதாகவும் அவருக்கும் கரிகாலனுக்கு பிறந்த குழந்தைதான் கிளியோபாட்ரா என்கிற அளவுக்கு கற்பனையாக ஒரு கதையை உருவாக்கி இருந்தேன். ஆனால், அந்த படம் உருவாகவில்லை எனக் கூறியுள்ளார்.

கலாய்க்கும் ரசிகர்கள்: நல்லவேளை கரிகாலன் படம் டிராப் ஆகி விட்டது என்றும் கரிகாலனின் மகள் கிளியோபாட்ரா என படம் எடுத்தால் ஏகப்பட்ட சர்ச்சைகள் வெடித்து இருக்கும். ஷங்கரின் உதவி இயக்குநரான காந்தி கிருஷ்ணா கொஞ்சம் கூட வரலாற்றை தெரிந்து வைத்துள்ளாரா? இல்லையா? என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். கிளியோபாட்ராவின் தந்தை பெயர் Ptolemy XII Auletes என வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. பொன்னியின் செல்வன் நந்தினியே கிளியோபாட்ராவை மையமாக வைத்து தான் உருவாக்கப்பட்டது என்றும் சிலர் கருதி வரும் நிலையில், காந்தி கிருஷ்ணா இப்படியொரு கதையை யோசித்து இருக்கலாம் என்கின்றனர்.

Gandhi Krishna Karikalan Cleopatra Vishal Indian 2 Chellame 2

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X