தல 55 படத்தின் க்ளைமாக்ஸ்... அஜீத்துக்கே தெரியாதாம்... ‘ரகசியம்’ காக்கும் மேனன்!

சென்னை: கௌதம்மேனன் இயக்கத்தில் இளமையான தோற்றத்துடன் அஜீத் நடித்து வரும் 55வது படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. தற்போதைக்கு அப்படம் தல 55 என்றே குறிப்பிடப் பட்டு வருகிறது.

இப்படத்தில் அஜீத்தின் ஜோடியா திரிஷா மற்றும் அனுஷ்கா என இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர். ஒரு குழந்தைக்கு தந்தையாக நடிக்கும் அஜீத், கருமை நிற முடி, பெப்பர் அண்ட் சால்ட் ஸ்டைல் மற்றும் தாடியுடன் என இப்படத்தில் மூன்று வித தோற்றங்களில் தோன்றுகிறார்.

பொதுவாக முழுக்கதையையும் கூறாமல் தான் ஹீரோக்களை புக் செய்வார் கௌதம்மேனன் எனக் கூறுப்படுவதுண்டு. அதில் அஜீத்தும் தப்பவில்லை. தற்போது அவர் நடித்துவரும் தல 55 படத்தின் க்ளைமாக்ஸை இன்னும் கௌதம்மேனன் அவருக்குச் சொல்லவில்லையாம்.

இது குறித்து ஆனந்தவிகடனுக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார் இயக்குநர் கௌதம்மேனன். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

வித்தியாசமான ஸ்கிரிப்ட் வொர்க்...

வித்தியாசமான ஸ்கிரிப்ட் வொர்க்...

முழுக்கதையும் சொல்லாமத்தான் அஜீத்தை இந்தப் படத்துல கமிட் பண்ணினேன். என் ஸ்கிரிப்ட்வொர்க் கொஞ்சம் வித்தியாசமானது.

க்ளைமாக்ஸ் பிக்ஸ் பண்ணமாட்டேன்...

க்ளைமாக்ஸ் பிக்ஸ் பண்ணமாட்டேன்...

மின்னலே தொடங்கி நீதானே என் பொன்வசந்தம் படம் வரைக்கும் ஸ்கிரிப்ட் கிட்டத்தட்ட முக்கால்வாசி முடிச்சிருவேன். ஆனா, க்ளைமாக்ஸ் மட்டும் ஃபிக்ஸ் பண்ணிக்கமாட்டேன்.

பைனலா ஒரு க்ள்ஐமாக்ஸ்...

பைனலா ஒரு க்ள்ஐமாக்ஸ்...

ஷூட்டிங் போயிருவோம். ஆனா, க்ளைமாக்ஸ் நினைப்பு மனசுல ஓடிட்டே இருக்கும். ஷூட்டிங் போகப் போக ஆர்ட்டிஸ்சின் ஈடுபாடு, காட்சிகளின் மேக்கிங் எல்லாம் சேர்த்து ஒரு க்ளைமாக்ஸை மனசுல ஃபிக்ஸ் பண்ணும்.

ஒரே பார்முலா தான்...

ஒரே பார்முலா தான்...

அதை கடைசியா ஷூட் பண்ணுவேன். காக்க காக்க, வாரணம் ஆயிரம் என என் எல்லா படங்களுக்கும் இந்த பார்முலா தான்.

அஜீத்துக்கும் அப்டி தான்...

அஜீத்துக்கும் அப்டி தான்...

அப்படி அஜீத் சாருக்கும் இந்தப் பட க்ளைமாக்ஸ் இன்னும் தெரியாது. அது இல்லாமல் தான் அவருக்கு கதை சொன்னேன்.

ஷூட்டிங் போய்டலாம்...

ஷூட்டிங் போய்டலாம்...

முதல் பாதி சூப்பர். இரண்டாவது பாதி அரைமணி நேரமும் பிரமாதம். ஷூட்டிங் போயிடலாம்னு படத்துக்குள்ள வந்துட்டார்.

சீக்கிரமா சொல்லணும்...

சீக்கிரமா சொல்லணும்...

‘ஜி... இன்னும் நீஙக் க்ளைமாக்ஸ் சொல்லலை. அவ்வளவு ரகசியமா வெச்சிருக்கீங்களா?'னு இப்பக் கூட அஜீத் சார் கேட்டார். சீக்கிரம் அவர்கிட்ட க்ளைமாக்ஸ் சொல்லணும்' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X