Clint Eastwood: 93 வயதிலும் முரட்டு கவ்பாய் கிளிண்ட் ஈஸ்ட்வுட்.. கார்த்திக் சுப்புராஜ் ட்வீட்!
சென்னை: பிரபல கவ்பாய் நடிகர் கிளிண்ட் ஈஸ்ட்வுட் தனது 93வது வயதிலும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நிலையில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் போட்ட ட்விட்டர் பதிவு தீயாக பரவி வருகிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா, நிமிஷா சஜயன் நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த நவம்பர் 10ம் தேதி வெளியானது.

அந்த படத்தில் ஹீரோ ராகவா லாரன்ஸுக்கு கேமராவை பரிசாக அளித்து அவரது பெயரை அலியஸ் சீசர் என மாற்றியதே கிளிண்ட் ஈஸ்ட்வுட் தான் என திரைக்கதையை கார்த்திக் சுப்புராஜ் உருவாக்கி இருப்பார்.
கிளிண்ட் ஈஸ்ட்வுட்டுக்கு சமர்ப்பணம்: ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் ராகவா லாரன்ஸ் கிளிண்ட் ஈஸ்ட்வுட்டின் ரசிகராகவே நடித்திருப்பார். மேலும், தியேட்டர் ஸ்க்ரீனில் டோர் அமைத்துக் கொண்டு கிளிண்ட் ஈஸ்ட்வுட் போலவே வந்து தனது எதிரியை பழிவாங்கும் காட்சிகள் நிறைந்திருக்கும். இந்த படமே கிளிண்ட் ஈஸ்ட்வுட்டுக்கு சமர்ப்பணம் என கார்த்திக் சுப்புராஜ் தேங்ஸ் நோட் எல்லாம் போட்டிருந்தார்.
93 வயதில் கிளிண்ட் ஈஸ்ட்வுட்: இயக்குநராக 1971ம் ஆண்டு அறிமுகமாகி பல கவ்பாய் ஸ்டைல் படங்களில் நடித்து ஒட்டுமொத்த ஹாலிவுட்டையும் வியக்க வைத்தவர் கிளிண்ட் ஈஸ்ட்வுட். எ ஃபிஸ்ட்ஃபுல் ஆஃப் டாலர்ஸ், தி குட் தி பேட் அண்ட் தி அக்லி, தி விட்சஸ், ஃபயர் ஃபாக்ஸ், சிட்டி ஹீட், மில்லியன் டாலர் பேபி, அமெரிக்கன் ஸ்னைபர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்த வயதிலும் அவர் புதிய படத்திற்காக ஷூட்டிங் சென்ற நிலையில், வெளியான புகைப்படம் உலகளவில் டிரெண்டாகி வருகிறது.
கார்த்திக் சுப்புராஜ் ட்வீட்: ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தில் கிளிண்ட் ஈஸ்ட்வுட் மேலக்குயில்குடியில் ஷூட்டிங் நடத்தியது போல திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கும். இந்நிலையில், கிளிண்ட் ஈஸ்ட்வுட்டின் சமீபத்திய ஷுட்டிங் புகைப்படத்தை ஷேர் செய்த கார்த்திக் சுப்புராஜ் மேலக்குயில்குடிக்கு ஷூட்டிங் வர ஐடியா இருக்கா சாரே என ட்வீட் போட்டுள்ளார். மேலும், தங்கள் ஆசியுடன் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் 3வது வாரத்தில் வெற்றிநடை போடுகிறது என்றும் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











