தானாக கழன்று ஓடிய பென்ஸ் கார் டயர்: அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த அமிதாப் பச்சன்

By Siva

கொல்கத்தா: பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் சென்ற பென்ஸ் காரின் ஒரு டயர் தானாக கழன்று ஓடிய விபத்தில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.

23வது கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழா துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அம்மாநில அரசு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு அழைப்பு விடுத்தது.

Close shave for Amitabh Bachchan in Kolkata

இதையடுத்து கொல்கத்தா வந்த அவர் சனிக்கிழமை காலை பென்ஸ் காரில் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது காரின் ஒரு டயர் கழன்று ஓடியுள்ளது.

இந்த விபத்தில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். அந்த காரை ஒரு டிராவல் ஏஜென்சி வழங்கியுள்ளது. அமிதாபை அழைத்துச் செல்ல அந்த ஏஜென்சிக்கு பெரிய தொகையை கொடுத்ததாக அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அந்த ஏஜென்சிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. காரில் அமிதாப் பச்சனுடன் மேற்கு வங்க மாநில மூத்த அமைச்சர் ஒருவரும் இருந்துள்ளார்.

இதையடுத்து அமைச்சரின் வாகனத்தில் அமிதாப் விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X