அட சட்டப்பேரவையிலுமா.. அங்கே போயும் குட்டி ஸ்டோரி சொல்லி கலக்குறாரே விஜய்.. என்ன தெரியுமா?

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பதவியேற்றிருக்கிறார். அவர் ஆட்சியமைப்பதற்கு திமுக கூட்டணி கட்சிகளின் உதவி தேவைப்பட்டது. பதவியேற்ற பிறகு மாற்று கட்சி தலைவர்களையும் அவர் சந்தித்தது விஜய்க்கு நல்ல இமேஜை கொடுத்திருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அவர் கூறியிருக்கும் குட்டி கதை ஒன்று மிகப்பெரிய கவனத்தை ஈர்த்திருக்கிறது. அதை பார்த்த ரசிகர்களோ அட விஜய் அண்ணா அங்கே சென்றும் இதை விடவில்லையே என கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சராக விஜய்; திமுக கூட்டணி கட்சிகளின் உதவியோடு ஆகியிருக்கிறார். சில நாட்களுக்கு முன்புதான் அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதனையடுத்து மூன்று கோப்புகளில் கையெழுத்திட்ட அவர்; தலைமை செயலகம் சென்று அங்கே முதலமைச்சர் பணிகளை தொடங்கினார். முதலமைச்சராக பதவியேற்றதும் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறார். முதல்கட்டமாக தமிழ்நாட்டில் மொத்தம் 717 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு அதிரடி உத்தரவிட்டிருக்கிறார்.

CM C Joseph Vijay s Kutty Story in Assembly Goes Viral
Photo Credit:

சபாநாயகர் தேர்வு: அதனைத் தொடர்ந்து மாற்று கட்சி தலைவர்களையும் சென்று சந்தித்து வாழ்த்தை பெற்றுக்கொண்டார். அது அவருக்கு நல்ல இமேஜை ஏற்படுத்தியிருக்கிறது. சூழல் இப்படி இருக்க இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் கூடியது. அதில் ஜேசிடி பிரபாகர் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை அவை முன்னவர் செங்கோட்டையனும், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியும் சேர்ந்து கை பிடித்து அழைத்து வந்து சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தார்கள்.

Also Read
பேரறிஞர் அண்ணா மாதிரி.. Hats Off ஆஃப் முதலமைச்சர் விஜய்.. முதல் ஹிட் கொடுத்த விக்ரமன் பெருமிதம்
பேரறிஞர் அண்ணா மாதிரி.. Hats Off ஆஃப் முதலமைச்சர் விஜய்.. முதல் ஹிட் கொடுத்த விக்ரமன் பெருமிதம்

விஜய் பேச்சு: அதனையடுத்து பேசிய விஜய், "பேரவை தலைவாராக நீங்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள். அந்த ஆசனத்தில் எதிர்க்கட்சி தலைவரும், அவை முன்னவரும் தங்களது கரங்களை பிடித்து அழைத்து சென்று அமர வைத்தார்கள். இந்த சம்பிராதயம் எப்படி வந்தது என்பதை தெரிந்துகொண்டால் சுவாரஸ்யமாக இருக்கும். இங்கிலாந்தின் பாராளுமன்றம் முறை போலவே நம்முடைய பாராளுமன்ற நடைமுறைகளும். மன்னர் காலத்திலேயே பாராளுமன்றம் இருந்தது. அனைத்து அதிகாரங்களையும் பெற்ற மன்னரும் இருந்தார். பாராளுமன்றமும் இருந்தது.

இதுதான் கதை: அங்கே மன்னர் ஒரு பணியை செய்ய வேண்டும் என விரும்புவார். ஆனால் பாராளுமன்றம் அதனை நிராகரிக்கும். அந்த நிராகரிப்பை மன்னரிடம் சொல்ல வேண்டியது ஸ்பீக்கர். இந்த கருத்தை அவர் மன்னரிடம் சொல்ல துணிவு வேண்டும். சில பணிகளை செய்வதற்கு மட்டும்தான் பாராளுமன்றத்துக்கு அதிகாரம் உண்டு. ஆனால் மரண தண்டனை விதிக்க மன்னருக்கு அதிகாரம் உண்டு. எனவே அந்த ஸ்பீக்கருக்கு மரண தண்டனை விதிப்பார்கள். தலையை வெட்டி விடுங்கள் என ஆணையிடுவார்கள். இது பலமுறை நடந்ததால். யாருமே ஸ்பீக்கர் பதவிக்கு வர விரும்பமாட்டார்கள்.

ஏன் அப்படி?: எனவே ஸ்பீக்கர் பதவி அறிவிக்கப்பட்டவுடன் அந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் தலை தப்பித்தால் போதும் என்று ஓட்டம் எடுப்பார். அவரை அவை முன்னர்வரும், எதிர்க்கட்சி தலைவரும் அவரை தடுத்து நிறுத்தி கைகளை பிடித்து இழுத்து வந்து ஆசனத்தில் அமர வைப்பார்கள். இதுதான் அந்தக் காலத்தில் இருந்த மரபு. ஜனநாயகம் வந்த பிறகும் அந்த மரபு இருக்கிறது. உங்களுக்கு தவெக உதவிக்கரமாக இருக்கும் என்ற உறுதியையும் நான் கொடுக்கிறேன்" என்றார்.

Read more about: vijay விஜய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X