நடிகர் ராமராஜன் - நளினி மகன் திருமணம்: முதல்வர் வாழ்த்து
சென்னை: நடிகர் ராமராஜன் - நளினி மகன் ஆர் அருண் - பவித்ரா திருமணம் நேற்று சென்னையில் நடந்தது. மணமக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா தன் அலுவலகத்தில் வைத்து ஆசி வழங்கினார்.

நடிகர் ராமராஜன் - நளினியின் மகன் ஆர் அருண். ராமராஜனும் நளினியும் விவாகரத்து செய்து கொண்டாலும், மகனின் திருமணத்தை சேர்ந்தே நடத்தினர்.
அருணுக்கும் பவித்திராவுக்கும் நேற்று சென்னையில் திருமணம் நடந்தது. தமிழ் திரையுலக பிரமுகர்கள் பலரும் திரண்டு வந்தனர். பழைய நடிகைகள் விசித்ரா, வினோதினி, நடிகர் செந்தில் உள்பட பலரும் வந்திருந்தனர். ராமராஜனும் நளினியும் ஜோடியாக நின்று வரவேற்றனர், அனைவரையும்.

திருமணம் முடிந்த கையோடு முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் மணமக்களுடன் சந்தித்தார் நளினி. இந்த சந்திப்பின்போது ராமராஜன் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மணமக்களுக்கு பரிசளித்து ஆசி கூறினார் முதல்வர் ஜெயலலிதா.


Click it and Unblock the Notifications











