'எந்திரன் படத்தில் மிரட்டிட்டீங்க ரஜினி' என்று பாராட்டினார் முதல்வர் கருணாநிதி.

இந்தக் காட்சியில் முதல்வர் கருணாநிதி, சூப்பர் ஸ்டார் ரஜினி, மத்திய ரசாயணம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதிமாறன், சன் குழும நிறுவனத்தின் தலைவர் கலாநிதிமாறன், தயாளு அம்மாள், செல்வி செல்வம் , காந்தி அழகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பார்த்தனர்.
மூன்று மணிநேரம் படம் ஓடியது. கலைஞருக்கு அருகில் ரஜினி அமர்ந்து பார்த்தார். ரோபோ ரஜினி வரும் சில காட்சிகளில் ரஜினிடம் முதல்வர் ஏதோ கூற, ரஜினி சிரித்துக் கொண்டார்.
படம் முடிந்ததும் கைதட்டி பாராட்டிய முதல்வர், ரஜினியிடம் "நடிப்பில் மிரட்டிட்டீங்க ரஜினி. எந்திரன் அனைவரையும் கவரும் மந்திரன்தான்" என்றார்.
முதல்வருக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார் ரஜினி.
முன்னதாக வியாழக்கிழமை இரவுக் காட்சியில் கலாநிதி மாறன் மற்றும் அவரது குடும்பத்தினர், இயக்குநர் ஷங்கர் ஆகியோர் எந்திரன் படம் பார்த்தனர்.


Click it and Unblock the Notifications











