twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆயிரத்தில் ஒருவன் மறுவெளியீடு.. முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

    By Shankar
    |

    சென்னை: டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு மறுவெளியீடாக வரும் எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    49 ஆண்டுகளுக்கு முன் மக்கள் திலகம் எம்ஜிஆரும் இன்றைய முதல்வர் ஜெயலலிதாவும் இணைந்து நடித்த படம் ஆயிரத்தில் ஒருவன்.

    மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்த இந்த படம், இப்போது டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு மறுவெளியீடு செய்யப்படுகிறது. திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் இந்தப் படத்தை வெளியிடுகிறார்.

    இதற்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.

    CM Jayalalithaa wishes re release of Aayirathil Oruvan

    அந்த செய்தி:

    திரைப்படங்கள் வழியாக மக்கள் மனதில் உயரிய சிந்தனைகளையும், வாழ்வில் நெறிகளையும் புகுத்த முடியும் என்பதை உலகிற்கே எடுத்துக் காட்டிய மாபெரும் கலையுலக மேதை, எனது அரசியல் ஆசான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள்.

    எனவே தான், பல கலை விமர்சகர்களும், திரைப்பட ஆர்வலர்களும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திரைப்படங்கள் 'வெறும்'பொழுதுபோக்கு படங்கள் மட்டுமல்ல, தலைமுறைகளைக் கடந்து நிற்கும் வாழ்க்கைப் படங்கள் என்று போற்றுகின்றனர்.

    புரட்சித் தலைவரின் திரையுலக வரலாற்றில் மிகப் பெரிய சாதனைக் கல்லாக அமைந்த திரைப்படம் 'ஆயிரத்தில் ஒருவன்'. அடிமைப்பட்டுக் கிடந்த மக்கள் தங்களை விடுதலை விரார்களாக மாற்றிக் கொல்கின்ற சம்பவன் க்கள் உலகின் பல இடங்களில் நிகழ்ந்திருக்கின்றன. அவற்றையெல்லாம் ஒரு திரைப்படத்தின் வழியாகத் திரட்டி மக்கள் மனதில் சுதந்திர வேட்கையையும், தனி மனித நேமையையும் நிலைநாட்ட 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்.

    அந்த மாபெரும் வெற்றிப் படத்தில் நான் முதன் முதலாக புரட்சித் தலைவரோடு இணைந்து நடிக்கின்ற நல்வாய்ப்பினைப் பெற்றேன்.

    'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு முன் வெளியிடப்பட்ட பொது தமிழகத்தில் மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. இன்றைய தலைமுறையினர் அந்த எழுச்சியைப் பெறவும், நாளைய தலைமுறையும் அதனால் பயன் பெறவும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம் மீண்டும் புது வடிவம் பெற்று வெளியாக இருக்கிறது என்பது எனக்கு மட்டுமல்ல, இன்றளவிலும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் மீது பற்று கொண்டவர்கள் மட்டுமல்ல, இந்தியத் திரையுலகிற்கும், திரை ரசிகர்கள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்ற ஒரு செய்தியாகும்.

    'ஆயிரத்தில் ஒருவன்' வெற்றித் திரைப்படத்தைப் புதுப்பித்து 14.03.201 முதல் தமிழ் நாட்டில் உள்ள திரையரங்குகளில் மறு வெளியீடு செய்ய தாங்கள் ஏற்பாடு செய்திருப்பதை அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி. தங்களின் இந்த முயற்சிக்கு எனது இதயமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், தங்களின் இந்தப் பயணம் தொடர எனது நல்வாழ்த்துகள்."

    -இவ்வாறு அந்த வாழ்த்துச் செய்தியில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

    பிறந்த பேறினை அடைந்தேன்

    முதல்வரின் இந்த வாழ்த்து குறித்து திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் கூறுகையில், "நமது தமிழக முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்கள், என்னுடைய இந்த முயற்சியினைப் பாராட்டி மிகவும் ஊக்குவித்து, வாழ்த்துச் செய்தியினை இன்று எமக்கு அளித்துள்ளார்கள். இதை எனது வாழ்நாள் சாதனையாக, நான் பிறந்த பேறினை அடைந்ததாகக் கருதுகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Chief Minister Jayalalithaa has conveyed her wishes for the re release of MGR's action classic Aayirathil Oruvan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X