கலைஞர் நினைவு வித்தகர் விருது விழா! முதலமைச்சரின் கன்னத்தைத் தொட்டுப் பேசிய பாடகி சுசீலா..செம க்யூட்

சென்னை: தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு நினைவினைக் கொண்டாடும் வகையில் தமிழ் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் மு.மேத்தா மற்றும் பின்னணிப் பாடகி பி. சுசீலா ஆகியோருக்கு 2023ஆம் ஆண்டிற்கான, கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் இவர்களுக்கு இன்று அதாவது அக்டோபர் 4ஆம் தேதி தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் விருது வழங்கி கௌரவித்தார். இந்நிலையில் விருது வாங்க வந்த பாடகி பி. சுசிலா முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடன் உரையாடினார். மேலும் அப்போது முதலமைச்சரின் கன்னத்தைப் பிடித்து அன்பாக பேசினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

ஏற்கனவே குறிப்பிட்டுள்ளதைப்போல், முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்னையில் உள்ள தமிழ்நாடு தலைமைச் செயலகத்திற்கு பாடகி பி.சுசீலாவுக்கும், கவிஞர் மேத்தா ஆகியோரை நேரில் வரவழைத்து கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகளை வழங்கினார். இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

mk stalin p susheela

கவிஞர் மு. மேத்தாவைப் பொறுத்தவரை தமிழ் சினிமாவிலும் சரி தமிழ் இலக்கியத்துறையிலும் சரி தவிர்க்க முடியாதவர் மரபுக் கவிதைகள் தொடங்கி புதுக்கவிதைகள் வரையிலும் சிறு கதைகள் தொடங்கி நாவல்கள், கட்டுரைகள் என மு மேத்தா இலக்கியத்துறையில் செய்த பணிகள் காலத்திற்கும் மெச்சத்தகுந்த பணிகள் என்றே கூறலாம். அதேபோல், சுமார் 70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கும் பாடல்கள் எழுதியுள்ளார்.

பாடல்கள்: இன்றைக்கு பல கோடி ரசிகர்களாலும் கொண்டாடப்படும் பாடல்களில் ஒன்றான, ' ராஜ ராஜா சோழன் நான்' பாடலை எழுதியது மு.மேத்தாதான். அதேபோல், 'காஞ்சி பட்டு சேலை கட்டி' பாடல் மூலம், தமிழ் சினிமாவில் பாடல்களின் திசை வழிப்போக்கினை மாற்றியவரும் இவர்தான். இவருக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தபோதே பலரும் பாராட்டினர். மேலும் அந்த விருதுக்கு மிகவும் பொருத்தமானவர் எனவும் கூறினர்.

mk stalin p susheela

பி. சுசுலா: அதேபோல் பழம் பெரும் பாடகி பி. சுசுலா. இவரது பாடல்கள் ஒலிக்காத இடங்கள் இல்லை எனக் கூறும் அளவிற்கு தமிழ் சினிமாவில் பல தசாப்தங்களாக பாடல்கள் பாடியவர். தற்போது வயது மூப்பினால் பாடல்கள் பாடுவது இல்லை என்றாலும், இவரது பாடல்கள் பலருக்கும் மருந்து, படகராக ஜொலிக்க நினைக்கும் பலருக்கும் படிப்பினை.

முதலமைச்சர் கன்னம்: தனது சிறு வயதில் இருந்து 70 ஆண்டுகளுக்கும் மேலான தனது இசைப் பயணத்தில், சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளும் அடங்கும். தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டிப் பறந்த பாடகர்களில் பி.சுசிலாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது எனக் கூறும் அளவிற்கு தனது குரலில் மாயாஜாலம் செய்து காட்டியுள்ளார். சிறந்த பின்னணிப் பாடகி என தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் விருதுகளை பலமுறை வழங்கி கௌரவித்துள்ளது.இந்நிலையில் இன்று அவருக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்பட்டது. அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கன்னத்தைத் தொட்டு பேசினார். அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் அன்போடு பவ்யமாக சிரித்துக் கொண்டே நின்றார். இந்த நிகழ்வு தொடர்பான காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X