twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நானும் திரைப்படத்தில் நடித்துள்ளேன்.. சிஐஐ மாநாட்டை தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

    |

    சென்னை: தென்னிந்திய தொழில் கூட்டமைப்பு மாநாட்டை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "நானும் திரைப்படத்தில் சிறிய வேடங்களில் நடித்துள்ளேன்" என பேசியது அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.

    தென்னிந்திய தொழில் கூட்டமைப்பு மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஏப்ரல் 9-ந்தேதி (இன்று) தொடங்கியது.

    விஜய்சேதுபதியை இயக்கப் போகிறாரா சேரன்? சூடான டாப் 5 பீட்ஸ் உடன் வெளியான பிகே விடியோ!விஜய்சேதுபதியை இயக்கப் போகிறாரா சேரன்? சூடான டாப் 5 பீட்ஸ் உடன் வெளியான பிகே விடியோ!

    ஏப்ரல் 9 மற்றும் 10 என 2 நாட்கள் நடைபெறும் மாநாட்டிற்கு சத்ய ஜோதி பிலிம்ஸ் தலைவர் டி.ஜி.தியாகராஜன் தலைமை தாங்குகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9-ந்தேதி காலை 10 மணிக்கு மாநாட்டை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றி உள்ளார்.

    சிஐஐ மாநாடு

    சிஐஐ மாநாடு

    தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின், மிகப்பெரும் கருத்தரங்கு நந்தம்பாக்கத்தில் ஏப்ரல் 9 மற்றும் 10ம் ஆகிய இருநாட்களில் நடைபெறுகிறது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இந்த விழாவில் இயக்குநர் ராஜமெளலி, மணிரத்னம், ஜெயம் ரவி உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.

    முதலமைச்சர் பேச்சு

    முதலமைச்சர் பேச்சு

    மாநாட்டை துவங்கி வைத்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "நானும் திரைப்படத்தில் சிறு வேடங்களில் நடித்துள்ளேன். திரைத்துறையுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு உள்ளதால் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளேன் என சிஐஐ மாநாட்டை தொடங்கி வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

    டிஜி தியாகராஜன்

    டிஜி தியாகராஜன்

    சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனர், தக்‌ஷின் மீடியா மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாட்டின் தலைவர் மற்றும் நிர்வாகப் பங்குதாரர் டி.ஜி. தியாகராஜன் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று நடத்தி வருகிறார். இந்த மாநாட்டை வழிநடத்தும் குழு உறுப்பினர்களான சுஹாசினி மணிரத்னம், குஷ்பு சுந்தர், சுஜாதா விஜயகுமார், லிஸ்ஸி லட்சுமி, ஜி.தனஞ்செயன் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த விழாவில் பங்கேற்றுள்ளனர்.

    ஏ.ஆர். ரஹ்மானுக்கு விருது

    ஏ.ஆர். ரஹ்மானுக்கு விருது

    இந்த விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிறந்த ஐகான் விருது வழங்கப்படுகிறது. இயக்குநர் மணிரத்னம், இயக்குநர் ராஜமெளலி மற்றும் நடிகர் ஜெயம் ரவி உள்ளிட்ட திரைத்துறையை சேர்ந்த பல முக்கிய பிரபலங்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர். தென்னிந்திய சினிமாவின் வளர்ச்சிக்கு இந்த மாநாடு உறுதுணையாக இருக்கும் என கூறப்படுகிறது.

    English summary
    South India Media and Entertainment Summit started at Chennai Nungambakkam. CM MK Stalin inaugurated the CII meet.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X