twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'சீஃப் மினிஸ்டர்'னா அவ்ளோ சீப்பா போயிடுச்சுல்ல: அப்பவே சொன்ன ரஜினி

    By Siva
    |

    சென்னை: முதல்வர் பதவி பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாபா படத்தில் சரியாக கூறியுள்ளார் என ரசிகர்கள் ட்வீட்டி வருகிறார்கள்.

    அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தமிழக முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு தமிழக மக்கள் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் பாபா படத்தில் முதல்வர் பதவி பற்றி ரஜினிகாந்த் சொன்ன கருத்து பற்றிய வீடியோ ட்விட்டரில் தீயாக பரவியுள்ளது. அந்த வீடியோவில் ரஜினி கூறியிருப்பதாவது,

    முதல்வர்

    முதல்வர்

    சீஃப் மினிஸ்டர்னா அவ்ளோ சீப்பா போயிடுச்சுல்ல. நினைச்சவன் எல்லாம் சி.எம். ம்ம்ம். யாரு வேண்டும்னாலும் முதலமைச்சராகிடலாம்.

    பதவி

    பதவி

    எப்பேர்பட்ட பதவி, எவ்வளவு பெரிய பொறுப்பு, ஒரு வேலைக்காரனை வச்சிக்கிட்டு நாலு பேரு இருக்கிற குடும்பத்தை சமாளிக்கவே திண்டாடுறீங்க.

    நேர்மை

    நேர்மை

    நாடுங்கிறது எவ்வளவு பெரிய வீடு. எத்தனை பேருங்க, எத்தனை ஆளுங்க, எத்தனை பிரச்சனைகள். அது எல்லாத்தையும் தீர்க்கணும். எவ்வளவு அனுபவம் வேணும், அறிவு வேணும், தியாகம் வேணும், நேர்மை வேணும், எளிமை வேணும்.

    சி.எம்.

    சி.எம். ஆயிடணுமாம். ம்ம்ம்ம். பெருசு, ஒரு தகப்பன் நல்லா இருந்தால் தான் ஒரு குடும்பம் நல்லா இருக்கும். ஒரு தலைவன், ஒரு சி.எம். நல்லா இருந்தால் தான் நாடு நல்லா இருக்கும் என பாபா படத்தில் ரஜினி தெரிவித்துள்ளார்.

    English summary
    Fans took to twitter to share the video of a scene in Rajinikanth starrer Baba in which superstar talks about the importance of CM post.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X