Jana Nayagan: CM சார்னு பேசிய விஜய்க்காக குரல் கொடுத்த CM ஸ்டாலின்.. பா.ரஞ்சித் சொன்ன முக்கியமான தகவல்

சென்னை: நடிகர் விஜயின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்ட ஜன நாயகன் படம் நேற்று அதாவது ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் படத்திற்கு சென்சார் கிடைக்காததால் படத்தை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்ய முடியவில்லை. இது ஒரு புறம் இருக்க, படத்திற்கு சென்சார் வழங்குவது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை ஜனவரி 21ஆம் தேதி வரை ஒத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம். இப்படி இருக்கும்போது, படத்தின் தயாரிப்பாளர் ரசிகர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் உள்ளிட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டார்.

ஜன நாயகனுக்கு சென்சார் வழங்குவதில் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பாக திரைத்துறையில் இருந்து பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது விமர்சனத்தையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், " CBI, ED, IT வரிசையில் சென்சார் போர்டும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது. கடுமையான கண்டனங்கள் #CBFC" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த போஸ்ட் விஜய் ரசிகர்கள் மத்தியில் மட்டும் இல்லாமல், திரைத்துறையினர் மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

CM Stalin and Pa Ranjith Condamns CBFC Activities Against Vijay Jana Nayagan Censor Issue

மேலும் பலர் முதலமைச்சர் ஸ்டாலினை பாராட்டியும் வருகிறார்கள். குறிப்பாக கரூர் சம்பவத்திற்குப் பிறகு CM சார் என்று பேசி விஜய் வீடியோ வெளியிட்ட போதும், முதலமைச்சர் ஸ்டாலின் ஜன நாயகன் படத்திற்கு சென்சார் தரப்பில் கொடுக்கப்படும் நெருக்கடிக்கு எதிராக குரல் கொடுத்திருப்பது என்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

பா. ரஞ்சித்: அதேபோல் இயக்குநர் பா. ரஞ்சித் தனது எக்ஸ் பக்கத்தில், " ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கை விவகாரத்தில் மத்திய திரைப்படத் தணிக்கை துறையின் செயல்பாடு மிகவும் மோசமானது. தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நடந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அப்பட்டமாகவே தெரிகிறது. அதே போல, 'பராசக்தி' திரைப்படத்திற்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகள் போன்றே, என் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்களுக்கும், நீலம் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படங்களுக்கும் கொடுக்கப்பட்டதை பலமுறை பகிர்ந்திருக்கிறேன்.

CM Stalin and Pa Ranjith Condamns CBFC Activities Against Vijay Jana Nayagan Censor Issue

குரல்: ஆனால், ஜனநாயகன் படத்திற்கு நிகழ்ந்திருப்பதென்பது, தணிக்கைத்துறை தவறான வழிகாட்டுதலுக்குள் சிக்கி இருப்பதைக் காட்டுகிறது. மேலும், மாற்றுக்குரல்கள் வராமல் தடுப்பதற்கான வேலையை மிகத் தீவிரமாக கடைபிடிக்கின்ற இது போன்ற மோசமான போக்கை வன்மையாக கண்டிக்க வேண்டும். படைப்பு சுதந்திரம் பாதுகாக்கவும், வரும் காலங்களில் மத்திய தணிக்கை துறை சுதந்திரமாக செயல்படவும் குரலெழுப்புவோம்" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவும் தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியிலும் திரை துறையினர் மத்தியிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X