ஷங்கரின் மகள் திருமணம்.. சொர்க்க பூமி போன்ற மேடை.. மாஸ்க்குடன் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: இயக்குநர் ஷங்கரின் மகள் திருமணத்தில் முதல்வர் ஸ்டாலின் மாஸ்க்குடன் பங்கேற்ற போட்டோக்கள் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராகவும் பிரமாண்ட இயக்குநராகவும் வலம் வருபவர் ஷங்கர்.
இவரது மூத்த மகளான ஐஸ்வர்யாவின் திருமணம் இன்று நடைபெற்றது. மருத்துவரான ஐஸ்வர்யாவுக்கு கிரிக்கெட் வீரரான ரோஹித்துடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.

தொழிலதிபர் மகன்
இந்நிலையில் இன்று சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ரெசார்ட்டில் விமர்சையாக திருமணம் முடிந்துள்ளது. கிரிக்கெட் வீரரான ரோஹித் தொழிலதிபர் தாமோதரனின் மகன் ஆவார்.

ரஞ்சி அணியின் கேப்டன்
தொழில் அதிபர் தாமோதரன் தமிழ்நாடு ப்ரீமியர் லீக்கில் விளையாடும், மதுரை பேந்தர்ஸ் அணியின் உரிமையாளராவார். ரோஹித், புதுச்சேரி ரஞ்சி கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளார்.

சொர்க்க பூமி போல்
மகாபலிபுரத்தில் உள்ள ரெசார்ட்டில் இயற்கை எழில் கொஞ்சும் சொர்க்க பூமி போன்று பிரம்மாண்ட மேடை அமைத்து மகளின் திருமணத்தை முடித்துள்ளார் ஷங்கர்.
ஷங்கரின் 2.0 படத்தின் கலை இயக்குனரான முத்துராஜ் இந்த மேடை செட்டை அமைத்துள்ளார்.

மாஸ்க்குடன் ஸ்டாலின்
இயக்குநர் ஷங்கரின் மகள் திருமணத்தில் முதல்வர் ஸ்டாலின், நடிகரும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மணமக்களை தவிர மற்ற அனைவருமே மாஸ்க் அணிந்து பங்கேற்றனர்.

மாலையும் கழுத்துமாய்
முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் திருமணத்தில் பங்கேற்ற போட்டோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. ஷங்கர், அவரது மனைவி மற்றும் அவரது சம்மந்தியான தாமோதரன், அவரது மனைவி ஆகியோரும் மாலையும் கழுத்துமாக பட்டு வேஷ்ட்டி சட்டை மற்றும் பட்டு புடவையில் கலக்கலாக உள்ளனர்.

நெருங்கிய உறவினர்கள்
இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போதுதான் கொரோனா இரண்டாவது அலை சற்று ஓய தொடங்கியுள்ளதால் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் பங்கேற்றுள்ளனர்.

விரைவில் வரவேற்பு
முகக்கவசம், சமூக இடைவெளி என கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி திருமணம் முடிந்துள்ளது. இதனிடையே லாக்டவுன் முழுவதும் விலக்கப்பட்டதும் சென்னையில் பிரம்மாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சி நடத்த இயக்குநர் ஷங்கர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











