ஷங்கர் மகள் திருமணத்தில் ஃபில்டர் காஃபியை சுவைத்த ஸ்டாலின்: மணமக்களுக்கு வழங்கிய பரிசு இதுதான்!

சென்னை: இயக்குநர் ஷங்கரின் மகள் திருமணத்தில் பங்கேற்ற ஸ்டாலின் ஃபில்டர் காஃபியை சுவைத்துள்ளார்.

Recommended Video

CM காலில் விழுந்து வாழ்த்து வாங்கிய Shankar மகள் மருமகன் Aishwarya Rohit Wedding

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர். இவரது மூத்த மகளான மருத்துவர் ஐஸ்வர்யாவுக்கு நேற்று திருமணம் நடைபெற்றது.

மதுரை பேந்தர்ஸ் கிரிக்கெட் அணியின் உரிமையாளரான தொழில் அதிபர் தாமோதரனின் மகன் ரோஹித்துடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐஸ்வர்யாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

வெல்கம் ரெசார்ட்

வெல்கம் ரெசார்ட்

ரோஹித் புதுச்சேரி ரஞ்சி கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளார். இந்நிலையில் நேற்று காலை சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள வெல்கம் ரெசார்ட்டில் இவர்களது திருமணம் நடைபெற்றது.

நெருக்கமானவர்கள் மட்டும்

நெருக்கமானவர்கள் மட்டும்

சினிமா கலை இயக்குநரான முத்துராஜ் அமைத்த பிரமாண்ட மேடையில் மகளுக்கு அசத்தலாய் திருமணம் செய்து வைத்தார் இயக்குநர் ஷங்கர். கொரோனா காலம் என்பதால் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டும் திருமணத்தில் பங்கேற்றனர்.

முதல்வர் பங்கேற்பு

முதல்வர் பங்கேற்பு

இயக்குநர் ஷங்கர் மகள் திருமணத்தில் முக்கிய விருந்தினராக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அவரோடு எம்எல்ஏவும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆகியோரும் பங்கேற்றனர்.

பசுமைக் கூடை பரிசு

பசுமைக் கூடை பரிசு

அவர்கள் முகக்கவசம் அணிந்து பங்கேற்றனர். திருமணத்தில் பங்கேற்ற ஸ்டாலின் மணமக்களுக்கு மரக்கன்றுகள் அடங்கிய பசுமைக் கூடையை பரிசாக வழங்கியுள்ளார்.

கைகளை கூப்பி நன்றி

கைகளை கூப்பி நன்றி

அதில் நாம் மரம் வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும் என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. திருமணத்திற்கு வந்து மணமக்களை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலினுக்கு இயக்குநர் ஷங்கர் கைகளை கூப்பி நன்றி கூறினார்.

சாப்பிட அழைத்த ஷங்கர்

சாப்பிட அழைத்த ஷங்கர்

மேலும் முதல்வர் ஸ்டாலின் இயக்குநர் ஷங்கர் ஆகிய இருவரும் அருகருகே அமர்ந்து சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர். அதனை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினை சாப்பிட அழைத்தார் ஷங்கர்.

ஃபில்டர் காஃபியை சுவைத்து

ஃபில்டர் காஃபியை சுவைத்து

அதற்கு சாப்பாடு வேண்டாம் காஃபி மட்டும் குடிக்கிறேன் என கும்பகோணம் ஃபில்டர் காஃபியை சுவைத்து குடித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றப் பிறகு பங்கேற்கும் முதல் திரைத்துறை சம்பந்தப்பட்டவர் வீட்டின் நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரமாண்ட வரவேற்பு

பிரமாண்ட வரவேற்பு

ஷங்கர் வீட்டு திருமணத்தில் முழுக்க சைவ உணவுகளே பரிமாறப்பட்டதாக தெரிகிறது. கொரோன தொற்று மேலும் குறைந்து சகஜ நிலைக்கு திரும்பியதும் சினிமா நட்பு வட்டாரத்திற்காக சென்னையில் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளாராம் இயக்குநு ஷங்கர்.

விரைவில் வரவேற்பு

விரைவில் வரவேற்பு

இதில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல் உட்பட பல பிரபலங்களும் பங்கேற்பார்கள் என தெரிகிறது. மேலும் மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் பாலிவுட் ஸ்டார்களும் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Read more about: shankar ஷங்கர்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X