TVK : அப்போ CM டைட்டில் கார்டு கன்ஃபார்ம்.. ஆல் ஏரியாவில் கில்லி.. ஜன நாயகன் விஜய் கம்மிங்!
சென்னை: தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தமிழக அரசியலில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் (TVK) தலைவருமான விஜய் அவர்களின் தலைமையிலான கட்சி, சுமார் 110-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த எதிர்பாராத அரசியல் மாற்றத்தினால், தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் விஜய் தான் என்று அவரது ஆதரவாளர்களும் ரசிகர்களும் தமிழகம் முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

'முதலமைச்சர் விஜய்' - திரையுலகில் எதிர்பார்ப்பு: விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகம்' திரைப்படம் இன்னும் திரையரங்குகளில் வெளியாகாத நிலையில், அவர் முதலமைச்சராகப் பதவியேற்ற பின்னரே இப்படத்தை வெளியிடத் படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக, திரையில் 'முதலமைச்சர் விஜய்' என்ற டைட்டில் கார்டுடன் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் இப்படம் இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்து தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடியில் ஸ்ரீநாத் வெற்றி: தூத்துக்குடி தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்ட நடிகர் ஸ்ரீநாத், அந்தத் தொகுதியின் தற்போதைய அமைச்சரும் திமுக மூத்த தலைவருமான கீதா ஜீவனைத் தோற்கடித்து பெரும் வெற்றி பெற்றுள்ளார். விஜய்யின் நெருங்கிய நண்பரான ஸ்ரீநாத்தின் இந்த வெற்றி, அரசியல் வட்டாரத்தில் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

வாழ்த்து மழை மற்றும் பாதுகாப்பு: விஜய்யின் வெற்றியைத் தொடர்ந்து, அவரது இல்லத்திற்கு நடிகை திரிஷா நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். மேலும், திரைத்துறையினர், சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும் விஜய்யின் இல்லத்திற்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications