விஜய் மௌனம்? தாமதப்படுத்தும் சங்கீதா.. சமரசப்பேச்சு.. ‘ஈகோ'வை விட்டு மீண்டும் இணைய வாய்ப்பு?

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தான செய்திகள் எப்போதுமே இணையத்தில் புயலை கிளப்பி வருகிறது. அந்த வகையில், செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் அவரது விவாகரத்து வழக்கு இன்று (ஜூன் 15) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

கடந்த ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி சங்கீதா தரப்பில் இருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு பல கட்டங்களைத் தாண்டி இன்று மீண்டும் நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஆனால், இன்றைய நீதிமன்றத்தின் உத்தரவுகளையும், வழக்கறிஞர்கள் பகிர்ந்த விபரங்களையும் உற்று நோக்கும் போது, இதில் விவாகரத்தைத் தாண்டி தம்பதியர் மீண்டும் ஒன்று சேர்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் மனு தாக்கல் செய்யாததன் பின்னணி: பொதுவாக கணவன் மனைவி இடையே ஒத்துப் போகவே முடியாது என்ற சூழல் வரும்போது, பரஸ்பரமாக இருவருமே நீதிமன்றத்தில் விவாகரத்து மனுக்களைத் தாக்கல் செய்வதுதான் வழக்கம். ஆனால், இந்த வழக்கில் இதுவரை சங்கீதா தரப்பில் மட்டுமே விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்திருக்கிறார். முதலமைச்சர் விஜய் தரப்பிலிருந்து தனியாக எந்தவொரு விவாகரத்து மனுவோ அல்லது சங்கீதாவின் மனுவிற்கு எதிர்ப்பு மனுவே இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை. விஜய் தரப்பில் காட்டப்படும் இந்த மௌனம், அவர் இந்த உறவை முறித்துக் கொள்ள விரும்பவில்லை என்பதையும், குடும்பத்தினருடன் பேசி தீர்த்துக் கொள்ள நினைப்பதாக சொல்லப்படுகிறது.

CM Vijay Sangeetha Divorce

ஆகஸ்ட் 7ந் தேதி விசாரணை: இந்திய குடும்ப நல நீதிமன்றத்தின் நோக்கமே விவாகரத்து கேட்டு வரும் தம்பதிகளை அவசரப்பட்டுப் பிரித்துவிடாமல், அவர்களுக்குள் இருக்கும் மனக்கசப்பை நீக்கி அவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்வார்கள். இன்று நடந்த விசாரணையில், வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆஜராகக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம், இருவரின் அதிகாரப்பூர்வ மெயில் ஐடி முகவரிகளை முதலில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, அடுத்த கட்ட விசாரணையை வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

தனி அறையில்: தமிழக முதலமைச்சராகப் விஜய் இருப்பதால், அவரது பாதுகாப்பு மற்றும் நிர்வாகப் பொறுப்புகளைக் கருத்தில் கொண்டு நீதிமன்றம் அவருக்கு நேரில் ஆஜராவதில் இருந்து சில விதிவிலக்குகளை அளிக்க பரிசீலித்து வருகிறது. இதனால், அடுத்த விசாரணையின் போது ஆகஸ்ட் 7ந் தேதி பொதுமக்களோ அல்லது ஊடகங்களோ இல்லாத 'இன்-கேமரா' முறையில், மூடிய அறைக்குள் இருவரிடமும் நீதிபதி தனித்தனியாகக் கவுன்சிலிங் நடத்த வாய்ப்பு உள்ளது.

சமாதான பேச்சுவார்த்தை: 20 ஆண்டுக்கும் மேலாக மனம் ஒத்த தம்பதிகளாக இருந்து அனோஷ்கா மற்றும் சஞ்சய் என இரு பிள்ளைகளுடன் வாழ்ந்த விஜய் மற்றும் சங்கீதா தம்பதியின் இந்த திடீர் பிரிவு ரசிகர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. நீதிமன்றம் கொடுத்துள்ள இந்த ஆகஸ்ட் 7ந் தேதி காலத்திற்குள், இரு குடும்பத்தின் பெரியவர்களும் பேசி ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என அவரது நலம் விரும்பிகள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஆனால், ஏற்கனவே விஜய், சங்கீதாவை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X