துப்பாக்கியை எஸ்கேவுக்கு கொடுத்துட்டேனே.. உனக்கு என்னப்பா வேணும்.. வைரலாகும் விஜய் - சிம்பு மீம்!
சென்னை: தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாள் அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ள நிலையில், தொடர்ந்து ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் அவரை சந்தித்து வருகின்றனர். நடிகர் திலகம் பிரபு குடும்பத்துடன் விஜய்யை சந்தித்தார். ஆர்ஜே பாலாஜி தனது மனைவியுடன் விஜய்யை சந்தித்து ஒரே ஒரு ட்வீட் போட சூர்யா ரசிகர்கள் கடிக்க ஆரம்பித்தனர். சூர்யாவே அதற்கு முற்றுப்புள்ளி வைக்க ஆர்ஜே பாலாஜியுடன் சூப்பர் மீட் ஒன்றை போட்டார்.
நடிகைகள் சினேகா, சிம்ரன் உள்ளிட்டோர் குடும்பத்துடன் விஜய்யை சந்தித்த நிலையில், நடிகர்கள் ஷாம், விஷால் மற்றும் சிம்பு உள்ளிட்டோர் நேற்று விஜய்யை சந்தித்த போட்டோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

சினிமா பிரபலங்களை மட்டுமே விஜய் சந்திக்கிறார் என்றும் தமிழ்நாட்டில் அவருக்காக ஓட்டுப் போட்ட மக்களை எல்லாம் சந்திக்க நேரமில்லையா? என்கிற விமர்சனங்களும் எழத்தான் செய்கின்றன. கூடவே சில குபீர் மீம்களும் உருவாகி வைரலாகி வருகின்றன.
சிஎம் விஜய்யை சந்தித்த சிம்பு: அரசன் படத்தில் நடித்து வரும் சிம்பு தமிழ்நாட்டின் தற்போதைய அரசனாக மாறியுள்ள முதலமைச்சர் விஜய்யை சந்தித்துள்ளார் என நேற்று சிம்பு ரசிகர்கள் இருவரது சந்திப்பு போட்டோக்களை ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர். சிம்பு அன்போடு தளபதி விஜய்யை கட்டிப் பிடித்து சிரித்த முகத்துடன் இருக்கும் போட்டோக்களுக்கு பலர் ஹார்ட்டின் போட்டு வருகின்றனர். தேர்தல் நாளிலும் விஜய்யின் டிரெஸ் கோடிலேயே சிம்பு வந்து ஓட்டுப் போட்டதும் தொடர்ந்து டி. ராஜேந்தர் விஜய்க்கு சப்போர்ட்டாக பேசி வந்ததையும் சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஜெஸ்ஸி சார்: விஜய் மற்றும் சிம்புவின் சந்திப்பை வைத்து நெட்டிசன் ஒருவர் உருவாக்கிய மீம் வைரலாகி வருகிறது. அதில், சிம்புவை பார்த்து விஜய்: துப்பாக்கியை சிவகார்த்திகேயனுக்கு கொடுத்து விட்டேனே? உனக்கு என்னப்பா வேண்டும் என்பது போல கேட்க, பதிலுக்கு சிம்பு: ஜெஸ்ஸி சார்.. என சொல்வது போன்ற குபீர் மீமை போட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
அரசன்: வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் அரசன் படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யா, சிவகார்த்திகேயன், சிம்பு என பல முன்னணி நடிகர்கள் தீபாவளி போட்டியில் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படமும் தீபாவளியை குறிவைக்குமா? அல்லது மேலும், தள்ளிப் போகுமா என கேள்விகள் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications