CM Vijay: நேரு ஸ்டேடியத்தில் உதாசீனப்படுத்த பட்ட விஜய்.. அதே இடத்தில் படைக்கும் வரலாறு

சென்னை: நடிகர் விஜய்யாக இருப்பது என்பது எளிதான விஷயமல்ல, அது கிட்டத்தட்ட ஒரு தவம் இருப்பது போன்று என்று அவரது ரசிகர்கள் இணையதளத்தில் விஜய்யை.. இல்லை இல்லை.. தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கையில் நேரு உள்விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ள முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி, நடைபெறவுள்ளது.

இப்படி இருக்கையில் விஜய் ரசிகர்கள், விஜய் ஆதரவாளர்கள், தவெக தொண்டர்கள், இணையவாசிகள் என பலரும் விஜய் குறித்த பல கடந்த கால தகவல்களை பகிர்ந்து வருகிறார்கள். அதிலும் தமிழ் சினிமாவின் 100 ஆண்டுகள் கொண்டாட்டம், அன்றைய முதலமைச்சராக இருந்த மறைந்த செல்வி ஜெ. ஜெயலலிதாவின் தலைமையில் நடைபெற்றது.

CM Vijay From Being Ignored at Nehru Stadium to Creating History at the Same Venue

கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த கொண்டாட்டத்திற்கு முன்னர் விஜய்யின் தலைவா படத்தின் பிரச்னை அதிமுகவினரை பெரும் கோபமடையச் செய்தது. விஜய்யின் பேனர்கள் கிழிக்கப்பட்டது. படத்தை ரிலீஸ் செய்வதற்கு பிரச்னை என பல பிரச்னைகள். தன்னால் தனது தயாரிப்பாளர் நஷ்டப்பட்டு விடக் கூடாது என்று, அன்றைய முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதாவைச் சந்தித்து, பேச முயற்சி செய்தார். அதன் பின்னர் ஒரு வழியாக படம் வெளியானது.

தவம்: இப்படி இருக்கையில் 2013இல் நடைபெற்ற நூற்றாண்டு கொண்டாடத்தில் விஜய்க்கு கடைசி வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் இப்போதும் கூட இணையத்தில் உலா வருகிறது. அந்த புகைப்படங்களை பகிர்ந்து, எந்த நேரு ஸ்டேடியத்தில் விஜய் உதாசிணப்படுத்தப்பட்டாரோ, அதே நேரு ஸ்டேடியத்தில் விஜய்யின் பல படங்களுக்கான புரோமோசன் நிகழ்ச்சிகள் நடைபெற்று இருந்தாலும், அவர் முதலமைச்சராக பதவி ஏற்பது என்பது, விஜய் ரசிகர்கள் கூறி வரும், விஜய்யாக இருப்பது ஒரு தவம் என்ற வாக்கியங்களை வரலாறாக மாற்றும் நிகழ்ச்சி.

CM Vijay From Being Ignored at Nehru Stadium to Creating History at the Same Venue

வரலாறு: விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்பதை பார்க்க தமிழ்நாடு முழுவதும் இருந்து தொண்டர்கள் நேரு ஸ்டேடியத்தில் குழுமி விட்டார்கள். சென்னை மாநகராட்சி முழுவதும் சுமார் 20 இடங்களில் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்பதை ராட்சத எல்.இ.டி திரைகளில் ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடே அதிர நேரு உள்விளையாட்டு அரங்கில், C. ஜோசப் விஜய் எனும் நான் என்று கூறி ஒரு வரலாற்றை தொடங்கவுள்ளார் தவெக தலைவர் விஜய்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X