போன முறை பாட்டிலுக்கு 10 ரூபாய்.. இந்த முறை பாடிய பாட்டு.. CM விஜய்யின் டார்கெட் மொத்தமா அந்த ஒருத்தர் தானா?

சென்னை: இணையத்துக்குள் நுழைந்தாலே முதலமைச்சர் விஜய் கரூருக்குச் சென்று பேசியது தொடர்பான தகவல்கள் தான் பெருமளவு வந்து குவிகிறது. அவரது பேச்சு, அதற்கு ரியாக்‌ஷன்ஸ் என மொத்த இணையமுமே இந்த வீக் எண்டில் இது குறித்து தான் விவாதிக்க உள்ளது. இப்படி இருக்கையில் இவர் தனது பேச்சில் தனது பட பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

முதலமைச்சர் விஜய் தனது பேச்சில் அதிகம் டார்கெட் செய்தது எதிர்க்கட்சியான திமுகவைத்தான். முன்னாள் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தொடங்கி, தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரையும் அட்டாக் செய்தார். இப்படி இருக்கையில் தவெக ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியதாக காவல்துறை சிலரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் என இருவருக்கும் தொடர்பு உள்ளது என்ற பொய் பிரச்சாரங்கள் இணையத்தில் அதிகரித்தது. இதனால் இந்த வழக்கு தொடர்பாக முன் ஜாமீன் கேட்டு இருவரும் விண்ணப்பித்தனர்.

CM Vijay Karur Speech He Sung His Movie Song For Targetting Senthil Balaji It s Remembers Bottlekku 10 Ruba

பாடல் பாடிய முதலமைச்சர் விஜய்: அவர்களின் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம் அவர்கள் இருவரும் தவெக சட்டமன்ற உறுப்பினர்களுடன் பேசியது தொடர்பாக எந்த ஆதாரமும் இல்லை என்பதால் அவர்கள் இருவருக்கும் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ஆனால் அவர்கள் இருவரையும் காவல்துறை கைது செய்ய தேடுதல் வேட்டை நடத்தியது. இப்படி இருக்கையில் கரூருக்கு சென்றுள்ள முதலமைச்சர் விஜய் தனது பேச்சில் செந்தில் பாலாஜி குறித்து பேசுகையில் அவரது பெயரைக் குறிப்பிடாமல், இங்க ஒருத்தர் இருந்தாரே அவர், "ஓடு... ஓடு... ஓடு... வரான் பாரு வேட்டைக்காரன்" என்று தனது பேச்சுக்கு இடையில் தான் நடித்த வேட்டைக்காரன் படத்தின் பாடலைப் பாடினார். அப்போது அங்கு திரண்டிருந்த தவெகவினர் ஆர்ப்பரித்தனர்.

CM Vijay Karur Speech He Sung His Movie Song For Targetting Senthil Balaji It s Remembers Bottlekku 10 Ruba

இணையத்தில் வைரல்: இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. கரூருக்கு இதற்கு முன்னர் சென்றபோது அதாவது தவெக தலைவராக பிரசாரத்திற்கு சென்றபோது, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விமர்சிக்க, பாட்டிலுக்கு 10 ரூபாய் என்ற பாடலை அவரே பாடினார். கரூர் துயர சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தினாலும், அதன் பின்னர் பாட்டிலுக்கு 10 ரூபாய் என விஜய் பாடியது பெரிய அளவில் கவனம் பெற்றது. அதேபோல் தற்போதும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை டார்கெட் செய்து பாடல் பாடியது தவெகவினர் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X