CM Vijay: தலைநகர் முழுவதும் அதிரப்போகும் C.ஜோசப் விஜய் எனும் நான்.. TVK சம்பவமா செய்யறாங்கப்பா

சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக, இன்று மே 10ஆம் தேதி பதவியேற்கிறார். தலைநகர் சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் சிறப்பாக செய்யப்பட்டு, விஜய் ரசிகர்கள், தவெக தொண்டர்கள் என அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர். இப்படி இருக்கையில், விஜய் முதலமைச்சராக பதவியேற்கும் நிகழ்ச்சி தலைநகர் சென்னையில் மக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் ராட்சத எல்.இ.டி. திரையில் நேரடியாக ஒளிபரப்படவுள்ளது. இது தொடர்பான தகவலை தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.

நடந்து முடிந்த தேர்தலில் 108 இடங்களை வென்றாலும் ஆட்சி அமைக்க போதுமான பெரும்பான்மை இல்லை. அப்படி இருக்கையில் கடந்த ஒரு வார காலமாக இன்னும் சொல்லப்போனால் கடைசி நான்கு நாட்களாக, திமுக கூட்டணிக் கட்சிகளிடம் விஜய் தரப்பில் இருந்து ஆதரவைத் திரட்டி, இன்று முதலமைச்சராக பதவியேற்கிறார்.

CM Vijay Oath Ceremony to Be Live Streamed Across Chennai on Giant LED Screens

திமுக கூட்டணிக் கட்சிகளோ ( காங்கிரஸ் தவிர) நாங்கள் திமுகவுடனான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தான் தொடர்கிறோம். விஜய்யின் தவெக ஆட்சி அமைக்க நிபந்தனையற்ற ஆதரவைத் தருகிறோம் என்று தெரிவித்தனர். திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுக்கான ஒப்புதல் கடிதத்தை வாங்கிக் கொண்டு ஆளுநர் மாளிகைக்கு மூன்று முறை நடையாக நடந்து, இறுதியாக விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்கிறார். வரும் 13ஆம் தேதி அதாவது புதன்கிழமை சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை அவர் நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இப்படி இருக்கையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்கவுள்ளார். அவர் முதலமைச்சராக பொறுப்பேற்பதை நேரில் பார்க்க தமிழ்நாடு முழுவதும் இருந்து அவரது கட்சித் தொண்டர்கள், சென்னையை நோக்கி திரளாக பயணித்துள்ளனர். இந்நிலையில் பொதுமக்களும் விஜய் பதவி ஏற்பதைப் பார்க்க ஏதுவாக தலைநகர் சென்னையில், குறிப்பாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 20 இடங்களில் ராட்சத எல்.இ.டி திரைகள் மூலம் திரையிடப்படுகிறது.

CM Vijay Oath Ceremony to Be Live Streamed Across Chennai on Giant LED Screens

இது தொடர்பான தகவலை தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது. அதாவது, " மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பதவியேற்கும் விழா கீழ்காணும் 20 இடங்களில் எல்.இ.டி. மின்னணுத் தொலைக்காட்சிகள் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

1. Anna Nagar Tower Park
2. Marina Beach
3. Koyambedu CMBT
4. Puratchi Thalaivar Dr. M.G. Ramachandran Central Railway Station
5. T. Nagar Bus Stand
6. Besant Nagar Beach
7. Thiruvanmiyur Bus Depot
8. Kathipara Urban Square
9. Semmozhi Poonga
10. Island Grounds Bus Stop
11. Nageswara Rao Park
12. Mylapore Tank Area
13. Vadapalani Bus Terminus
14. MGR Nagar Market Area
15. Sholinganallur Junction
16. Madhavaram Bus Terminus
17. Porur Junction
18. Ambattur O.T. Bus Stand
19. Tondiarpet Bus Depot Area
20. Adyar Depot Junction" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X