தலைநகரில் CM விஜய்.. ஹேர் ஸ்டைல் குறித்து சிலாகித்து பேசும் ரசிகர்கள்.. ஸ்டைலிஷ் CM பாஸ் அவரு!

டெல்லி: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் காட்சிகள் எல்லாம் மொத்தமாக மாறிவிட்டது. அதாவது நடிகர் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்று ஆட்சி நடத்தி வருகிறார். ஆட்சி அமைத்து இரண்டு வாரங்களே ஆனாலும் பாராட்டுகளும் விமர்சனங்களும் எதிர்ப்புகளும் என பலவும் ஆட்சியை நோக்கி வந்து கொண்டே உள்ளது.

இப்படிப்பட்ட பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் தான், தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதலமைச்சர் விஜய் தனது முதல் அரசுமுறைப் பயணமாக டெல்லிக்குச் சென்றுள்ளார். மொத்தம் இரண்டு நாட்கள் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் பயணம், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பையும் உற்றுநோக்கலையும் ஏற்படுத்தியுள்ளது.

CM Vijay s Stylish Delhi Look and New Hairstyle Trend Go Viral Among Fans

முதலமைச்சரின் இந்த இரண்டு நாள் டெல்லி பயணத்தில் மிக முக்கிய நிகழ்வாக, பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு அமையவுள்ளது. இந்தச் சந்திப்பின் போது, தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள், மாநிலத்திற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் பல்வேறு நிலுவை தொகைகளை விரைந்து வழங்க கோரும் முக்கிய மனுவை பிரதமரிடம் முதலமைச்சர் விஜய் நேரில் அளிக்கவுள்ளார். இது மட்டுமன்றி, மத்திய நிதியமைச்சர், உள்துறை அமைச்சர் உள்ளிட்ட முக்கிய மத்திய அமைச்சர்களையும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி போன்ற எதிர்க்கட்சித் தலைவர்களையும் அவர் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளார்.

இதுதான் பிளான்: அரசியல் ரீதியான சந்திப்புகள் ஒருபுறமிருக்க, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையையும் முதலமைச்சர் விஜய் திறந்து வைக்கவுள்ளார். தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்து, சத்யராஜ் குடும்பத்திற்குள் வெடித்த அரசியல் முரண்பாடுகள் மற்றும் உதயநிதி - திவ்யா சத்யராஜ் சந்திப்பு என இணையமே பரபரப்பாக விவாதித்துக் கொண்டிருக்கும் இதே வேளையில், முதலமைச்சர் விஜய்யின் இந்த டெல்லி பயணம் தேசிய அளவிலும் தமிழக அளவிலும் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளுக்கான முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

CM Vijay s Stylish Delhi Look and New Hairstyle Trend Go Viral Among Fans

ரசிகர்கள் ரசிக்கறாங்கப்பா: இந்நிலையில் அவருக்கு டெல்லியில் காவல்துறை மரியாதை கொடுக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவ, அதை இணையத்தில் பகிர்ந்த அவரது ரசிகர்கள் முதலமைச்சர் விஜய் ஹேர் ஸ்டைல் மாத்தீட்டாரு போல என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள். மேலும் சிலரோ, இன்றைக்குத்தான் அவர் தலை முடியை சீவி உள்ளார் என்று நினைக்கிறேன் என்றும் கமெண்ட் போட்டு வருகிறார்கள். இந்த பயணத்தில் அவரது ஜன நாயகன் படத்தின் சென்சார் விவகாரம் தொடர்பாகவும் பேசப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் இரண்டு மாதங்களுக்கு முன்னர் இதே டெல்லிக்கு விஜய் சிபிஐ விசாரணைக்குச் சென்றிருந்தார். ஆனால் இன்றைக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சராக வந்துள்ளார் என்றும் ஃபயர் விட்டு வருகிறார்கள். கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விஜய்யிடம் விசாரணை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X