CM Vijay Speech Reaction: கரூரில் கர்ஜித்த CM விஜய்.. கார் ஓட்டிக் கொண்டே வைஃப் செய்த நடிகர் ஜீவா ரவி
சென்னை: முதலமைச்சர் விஜய், ஜூலை 10ஆம் தேதி கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார். அதில் அவர் பேசியது பலரது கவனத்தை ஈர்த்தது. மேலும் அவரது பேச்சுக்கு ரியாக்ஷன்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆதரவு, எதிர்ப்பு என இணையம் முழுவதும் விஜய் தான் டிரெண்டிங். இப்படி இருக்கையில், நடிகர் ஜீவா ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யின் பேச்சுக்கு வைஃப் செய்து கொண்டு கார் ஓட்டிக் கொண்டு செல்லும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
முதலமைச்சர் விஜய்யின் பேச்சில் பலரது கவனத்தை ஈர்த்தது என்றால், மக்களை நோக்கி யாராவது லஞ்சம் கேட்டால் கொடுக்க முடியாது என்று கூறுங்கள். அதையும் மீறி கேட்டால் நடப்பது எனது அண்ணாவின் ஆட்சி, தம்பியின் ஆட்சி, மகனின் ஆட்சி என்று கூறுங்கள் என்று பேசி இருந்தார். இவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்தது.

அதேபோல் ஜீவா ரவி பகிர்ந்துள்ள வீடியோவில், முதலமைச்சர் விஜய் எதிர்க்கட்சியான திமுகவை டார்கெட் செய்து பேசியது ஓடிக் கொண்டு உள்ளது. குறிப்பாக சட்டமன்றத்தில் நான் பேசும் போது பார்டி ஃபண்ட் என்று கூறியதும் திமுகவினர் சட்டமன்றத்தில் இருந்து ஓடி விட்டார்கள் என்று பேசிக் கொண்டு இருக்கிறார் முதலமைச்சர் விஜய். நடிகர் ஜீவா ரவியின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
திமுக பதிலடி: அதே நேரத்தில் இந்த வீடியோவுக்கு திமுகவினர் பதிலடிகளையும் கொடுத்து வருகிறார்கள். அதாவது, லஞ்சம் கொடுக்க வேண்டாம் என்று முதலமைச்சர் சொல்வது ஆரோக்கியமான விஷயம். ஆனால் அரசு வழக்கறிஞர்களை நியமிப்பதற்கு லட்சக்கணக்கில் லஞ்சம் பெறப்பட்டதாக தவெக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த வழக்கறிஞரே நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் என்பது முதலமைச்சருக்கு தெரியுமா? இல்லை வேண்டும் என்றே மறைக்கிறாரா என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

அதேபோல், சட்டமன்றத்தில் பார்ட்டி ஃபண்ட் என்று கூறியதுமே, எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை நோக்கி, பார்ட்டி ஃபண்ட் என்று மட்டும் தானே சொல்லி இருக்கிறீர்கள்? தைரியம் இருந்தால் எந்த கட்சி என்று சொல்லுங்கள், எதையும் எதிர்கொள்ள நாங்கள் தயார், தைரியம் இருக்கிறதா என்று சட்டமன்றத்திலேயே பதிலடி கொடுத்தார். ஆனால் அதற்கு முதலமைச்சரோ தவெக அமைச்சர்களோ பதில் சொல்லவே இல்லை" என்று வீடியோ மற்றும் எழுத்து பதிவுகள் மூலம் பகிர்ந்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications