இதுவே முதல்முறை.. விஜய் அரசியலுக்கு வந்ததில் இருந்து.. அதுவும் டெல்லியில் தான் நடக்குது.. விஷயம் தெரியுமா?

சென்னை: தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் போது, அந்த சினிமா வாழ்க்கை வேண்டாம் என விட்டுவிட்டு, அங்கிருந்து நேரடியாக அரசியல் களத்தில் களமிறங்கி, கட்சி தொடங்கி இரண்டரை ஆண்டுகள் கூட முழுவதுமாக முடிவதற்குள் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற அரியணையை தனதாக்கி உள்ளார் நடிகரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஜோசப் விஜய். அவரது அரசியல் பயணத்தை தொடங்கும் போது பலரும் வாழ்த்து தெரிவித்தாலும், இவரது முதல் மாநாட்டுக்குப் பின்னர் பெரும் விமர்சனங்களை எதிர் கொள்ளத் தொடங்கினார்.

விஜய் தனது அரசியல் பேச்சுக்களை சினிமா டயலாக்குகளைப் போல பேசுகிறார். தன் பின்னால் திரண்டு நிற்கும் இளைஞர்களை சித்தாந்த அரசியலை நோக்கி வழி நடத்தாமல், தனிமனித துதியைத்தான் மேலோங்கச் செய்கிறார். பத்திரிகையாளர்களைச் சந்திக்க வில்லை, மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவை விமர்சிப்பதில் போலியாக நடந்து கொள்கிறார். திமுக எதிர்ப்பு என்ற விமர்சன அரசியலை மட்டும் கையில் எடுக்கிறார் என பல விமர்சனங்கள் இருந்தாலும், மிகவும் முக்கியமாக வைக்கப்பட்ட விமர்சனங்களில் ஒன்று, " பனையூர், நீலாங்கரையில் இருந்து கொண்டே அரசியல் செய்கிறார்.

CM Vijay Stays Overnight in Delhi for First Time Since Entering Politics Fans React

களத்திற்கு வர மறுக்கிறார். பிரசாரத்திற்கு எங்கு சென்றாலும் தனது நீலாங்கரை வீட்டிற்கு வந்துவிடுகிறார். குறிப்பாக கரூரில் அவரைப் பார்க்க வந்த ரசிகர்களும் தொண்டர்களும் நெரிசலில் சிக்கி உயிரிழந்த போதும் தனது நீலாங்கரை வீட்டிற்கு வந்துவிட்டார். இப்படி இருக்கையில், தேர்தல் பிரசாரத்தை தமிழ்நாட்டில் எங்கு நடத்தினாலும் மாலை தனது நீலாங்கரை வீட்டிற்குத் திரும்பிவிடுவார்.

அரசியல் வாழ்க்கை: தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரும் கூட, தனது பட்டினப்பாக்கம் வீட்டிற்கு கூட சென்றிருந்தார். ஆனால் அவர் அரசியல் வாழ்க்கையில் ஈடுபட தொடங்கியதில் இருந்து வெளியில் தங்கவில்லை. ஆனால் தனது சினிமா படப்பிடிப்புகளுக்காக வெளிநாடுகளிலும் வெளியூர்களிலும் கூட தங்கி உள்ளார். இன்னும் சொல்லப்போனால் அரசியல் கட்சி தொடங்கிய பின்னர் நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்காக கோவாவில் ஒரு இரவு தங்கி இருந்தார். ஆனால் அரசியல் நிகழ்வுகளில் கலந்து கொண்ட போது தனது வீட்டிற்கு இரவு எவ்வளவு நேரம் ஆனாலும் சென்றுவிடுவார்.

CM Vijay Stays Overnight in Delhi for First Time Since Entering Politics Fans React

முதல் முறை: இப்படி தனது அரசியல் வாழ்க்கையில் ஈடு பட்டுக் கொண்டிருந்த முதலமைச்சர் விஜய், மே 27 மற்றும் 28ஆம் தேதி என இரண்டு நாட்கள் அரசு முறைப் பயணமாக டெல்லிக்குச் சென்றுள்ளார். இதில் பிரதமர், நிதி அமைச்சர் என பலரையும் முதல் நாளில் சந்தித்து விட்டார். 27ஆம் தேதியான இன்று தலைநகர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்க உள்ளார். இப்படி இருக்கையில் முதலமைச்சர் விஜய் தனது அரசியல் வாழ்க்கையில் ஈடுபட தொடங்கியதில் இருந்து, அரசியல் நிகழ்வுகள் தொடர்பாக முதன் முதலாக தனது இல்லம் இல்லாமல் வெளியில் தங்குவது இதுவே முதல் முறை. அதுவும் தலைநகர் டெல்லியில் தங்குகிறார் என்பதும் தவெகவினர் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Read more about: dmk vijay thalapathy vijay delhi tvk
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X