நாங்கெல்லாம் கோட் சூட் போடக்கூடாதா?..கல்யாண வீட்டுலயும் புலம்புறாங்க.. முதல்வர் விஜய் பேச்சு!

சென்னை: திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் விஜய், தான் சூட்-கோட் அணிந்து வருவதை விமர்சிப்பவர்களுக்கு நேரடியாக பதிலடி கொடுத்தார். "நான் சூட் கோட் போட்டு வருவதை பார்த்து பலர் விமர்சனம் செய்கிறார்கள். ஏன்? நாங்க எல்லாம் சூட் கோட் போடக்கூடாதா? அதிகாரம் செய்பவர்களும், ஆதிக்கம் செலுத்துபவர்களும் மட்டும் தான் சூட் கோட் போட வேண்டுமா?" என்று கேள்வி எழுப்பிய அவர், தனது கருப்பு-வெள்ளை உடை தேர்வுக்குப் பின்னுள்ள காரணத்தையும் விளக்கினார்.

கோட் சூட் போட கூடாதா : திருச்சி கிழக்கு தொகுதியில் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பேசிய விஜய், நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு சூட் கோட் போட்டு வருவதை பார்த்து பல பேர் விமர்சனம் செய்கிறார்கள். ஏன்? நாங்க எல்லாம் சூட் கோட் போடக்கூடாதா? அதிகாரம் செய்பவர்களும், ஆதிக்கம் செய்பவர்கள் மட்டும் தான் கோட் சூட் போட வேண்டுமா? அப்படி எல்லாம் எதுவுமே கிடையாது. நான் என்ன... கலர் கலராக வா போட்டு வருகிறேன். ரெண்டே கலர், நம்ம அனைவரின் மனசு மாதிரியே பிளாக் அண்ட் ஒயிட். அனைத்து விஷயங்களிலும் பிளாக் அண்ட் ஒயிட்டாக இந்த விஜய் இருப்பான் என்பதை காட்டுவதற்காகத்தான் அந்த கலர். கருப்பு யாரைக் குறிக்கும் என்பதை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அது உங்களுக்கே நன்றாக தெரியும்.

CM Vijay speech Trichy

நச நசனு: எல்லாத்துக்கும் இப்படி விளக்கம் கொடுத்து கொண்டு 'நச நச'னு பேசும் டைப் நான் இல்லை. உங்களுக்கே தெரியும் அதிகபட்சமாக அனைத்து மீடங்களிலும் 20 நிமிடத்திற்குள் தான் நான் பேசி இருக்கிறேன். அதனால், மக்கள் இப்போது என்னிடம் என்ன சொல்கிறார்கள் என்றால், இந்தப்பா விஜய், நீ எங்களுக்காக உழைப்பதற்காக வந்திருக்க, நீ அந்த வேலைக்கு மட்டும் பாரு, உன்னை பற்றி பேசுகிறபவர்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என சொல்கிறார்கள் என்றார்.

அமைதியா இல்லை: தொடர்ந்து பேசிய முதல்வர் தவெக ஆட்சிக்கு வரக்கூடாது என திமுக பல சதிகளை செய்தார்கள், 6 மாதம் அமைதியாக இருப்போம் என எதிர்கட்சியினர் கூறினார்கள். ஆனால், 6 நாட்கள் கூட அமைதியாக இருக்க முடியல, ஆட்சிபொறுப்பேற்ற அரைமணி நேரத்திலேயே ஆரம்பித்து விட்டார்கள். கல்யாண வீட்டில் கூட புலம்புகிறார் என முதல்வர் விஜய் திருச்சியில் பேசி இருக்கிறார். 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜய், பின்னர் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

Read more about: speech trichy பேச்சு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X